Top News

ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் பட்சத்தில் பாரிய எதிர் விளைவுகள்



ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் பட்சத்தில் பாரிய எதிர் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என ஜோடனின் வெளிவிவகாரத்துறை அமைச்சு எச்சரித்துள்ளது.

இப்படியான நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபடும் பட்சத்தில் பாரிய எதிர் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என ஜோடானிய வெளிவிவகார அமைச்சர் அய்மன் சபாடி  குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து அமெரிக்க ராஜாங்க செயலாளர் ரெக்ஸ் ரில்லசனின் கவனத்திற்கு தாம் கொண்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இப்படியான செயல்பாடுகள் சர்வதேச அராபிய முஸ்லீகளின் சீற்றத்திற்கு வழிவகைக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தலைநகர் மாற்றத்திற்கு ஆதரவான அறிவித்தல் எதனையும் வெளியிடகூடாது என்பதற்கு சர்வதேச ஆதரவினை கோரும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post