இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபனத்தின் பணிப்பாளராக மொஹமட் பாருக் நியமிக்கப்பட்டுள்ளார். உடன் அமுலுக்கு வரும் வகையில் இவருக்கான நியமனத்தை (12) ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வழங்கியுள்ளார்.
இதுவரை காலமும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகப் பணியாற்றிய சுதர்ஷன குணவர்தனவுக்குப் பதிலாகவே, சித்தி மொஹமட் பாரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர் 2009-2017 வரையான காலப்பகுதியில் பான் ஏஷியா,பவர் பீ.எல்.சீ.நிறுவனம் ஆகியவற்றின் பணிப்பாளர்,பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார்.