Top News

இந்தியாவில் நிலநடுக்கம்!



இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் நேற்று இரவு 8.45 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.உத்தராகண்ட் மாநிலத்தில் பரவலான நிலநடுக்கம் பதிவாகியுள்ள அதேவேளை, இந்தியாவின் தலைநகரான டில்லியிலும் உணரப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கமானது ரிசடடர் அளவுகோலில் 5.5 என பதிவாகியுள்ளது.
குறிப்பாக ஐரோப்பிய-மத்தியதரை நிலநடுக்க ஆய்வு மையத்தின் தகவல்களின் படி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையம் டெஹ்ராடூனுக்கு 121 கிலோ மீற்றர் கிழக்கே இருந்ததாக நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்திய நிலநடுக்க மையம், இதன் மையம் உத்தராகண்ட் ருத்ரபிரயாக் அருகே இருந்ததாகவும் 30 கிலோ மீற்றர் ஆழத்தில் இருந்ததாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.
முதல்கட்ட தகவல்களின் படி நிலநடுக்கத் தாக்கம் குறிப்பிடத்தகுந்த அளவில் இல்லை என்றும் பலர் இதை உணரவில்லையெனவும் தெரிகிறது. இது குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகாததால் தற்போது நிலைமை தெரியவரவில்லை. இதனால் ஏற்பட்ட சேத விபரங்களும் இதுவரை அறியக்கிடைக்கவில்லை.
இதனால் டில்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் நில அதிர்வு காரணமாக வீட்டை விட்டு வெளியேறினர். மேலும், அலுவலகத்தில் வேலை செய்பவர்களும் அங்கிருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
Previous Post Next Post