இனவாதிகளை நாய்க் கூண்டில் அடைக்க வந்த அரசு,அவர்களை பாதுகாக்கின்றனர்

NEWS


இலங்கை நாட்டில் சில வருடங்களாக இனவாதம் உச்ச அளவில் உள்ளமையாவரும் அறிந்ததேஇவ்வாறான சூழ் நிலையில் ஆட்சியமைத்தஇவ்வாட்சியாளர்கள்இனங்களுக்கிடையிலான நல்லுறவை பிரதான கோசமாகமுன்வைத்திருந்தார்கள்இருந்த போதிலும் இவ்வாட்சியாளர்கள்இனங்களுக்கிடையில் நல்லுறவை பேண எதனையும் செய்யும்.

மாறாகஇவ்வாட்சியில் இனவாதம் முன்னரை விட அதிகம் துளிர் விட்டுள்ளது.முன்னரெல்லாம் இனவாத செயற்பாடுகளை யாராவது பிரபலமானமதத்தலைவர்கள்அரசியல் வாதிகள் தான் முன்னெடுப்பார்கள்ஆனால்,இவ்வாட்சியில் சாதாரணமானவர்கள் கூட இனவாத செயற்பாடுகளை முன்னின்றுசெய்கின்றனர்அந்தளவு இவ்வாட்சியில் இனவாத செயற்பாடுகளுக்கு அங்கீகாரம்வழங்கப்பட்டுள்ளன.

அப்படியான ஒருவர் தான் டான் பிரசாத்அவர் மீது இனவாத வழக்குகள்அடுக்கப்பட்டுள்ளனவழக்குகள் அடுக்கப்பட்டுள்ள ஒருவரால் நீதிமன்ற அனுமதிஇன்றி வெளிநாடுகள் செல்ல முடியாதுஇருந்த போதிலும் டான் பிரசாத்வெளிநாடு சென்றுள்ளார்நீதிமன்ற அனுமதி பெற்றதாகவும் தகவலில்லைஇதுஉயர் மட்ட அரச அங்கீரமின்றி நடந்தேறியிருக்க வாய்ப்பில்லை.

இவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதால் இனவாத பிரச்சினைகள் தீர்ந்துவிடும்என்றால் நாம் இதனை பெரிதாக எடுக்க வேண்டிய அவசியமில்லைமிகவும்பாரதூரமான இனவாத செயற்பாடுகளை முன்னின்று செய்த ஒருவருக்கு,இப்படியான தப்பிக்கும் வாய்ப்புக்கள் வழங்கப்படுகையில்இது போன்று இனவாதசெயற்பாடுகளை முன்னெடுப்போருக்கு நாமும் தப்பித்துக்கொள்ளலாம் என்றஎண்ணம் எழுந்து ஊக்கமளிப்பதாக அமைந்துவிடும்டான் பிரசாத்போன்றவர்களின் பேச்சுக்களால் இலங்கையில் இனவாதம் பரந்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.

இனவாதிகளை நாய்க் கூண்டில் அடைப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த இவ்வரசு,இப்படி இனவாதிகளை தப்பிக்க செய்வது எந்த வகையிலும் பொருத்தமானதல்ல

இப்படி சாதாரணமானவர்களை கூட தப்பிக்க விடுவது இவர்கள்இவ்வாட்சியாளர்களின் அங்கீகாரங்களோடு தான் களமிறக்கப்பட்டவர்கள்என்பதை அறிந்துகொள்ளச் செய்கிறதுஇன்று இவ்வாட்சியில் இனவாதசெயற்பாடுகளை முன்னெடுப்போருக்கு உயரிய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

 அஹமட்
ஊடக செயலாளர்,
முஸ்லிம் முற்போக்கு முன்னனி.
6/grid1/Political
To Top