ராஜபக்சவின் தேவை அவசியமில்லை என, துறைமுக மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று (5) நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சியையும் ஆதரிக்கப் போகிறோம் என்று சொல்வதற்குக் கூட கூட்டு எதிரணிக்கு உரிமை இல்லை. வேறொரு கட்சியை அவர்கள் ஆதரிப்பார்களேயானால் அது கட்சியின் விதிமுறைகளை மீறுவதாக அமையும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் அதை எதிர்த்து நாம் நடவடிக்கை எடுக்கவும் முடியும்.
“வரப்போகும் உள்ளூராட்சித் தேர்தலில், மஹிந்த ராஜபக்சவின் உதவி இல்லாமலேயே ஸ்ரீல.சு.க. நிச்சயமாக வெற்றிபெறும். முன்னெப்போதையும் விட தற்போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் பெரும்பாலானோர் ஒன்று திரண்டு வருகிறார்கள். கதவுகள் இன்னும் திறந்துதான் இருக்கின்றன. ஸ்ரீல.சு.க. வுடன், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் யாரும் வந்து இணையலாம்.” இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.