கொழும்பின் சில பகுதிகளில் நடைபெற்று வரும் நிலத்தடி நீர் குழாய் திருத்த பணிகள் காரணமாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிராண்பாஸ் பலாமரச்சந்தியிலிருந்து உறுகொடவத்த சந்தி வரையிலான ஸ்ரேஸ் வீதியின் ஒரு நிரல் தற்காலிகமாக இன்று இரவு முதல் மூடப்படவுள்ளது.
இன்று இரவு 9.00 மணி முதல் 11 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரையில் இந்த வீதியில் ஒரு நிரல் மூடப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளார்.
அதுவரையில் மற்றைய ஒரு வழி மாத்திரமே பயன்படுத்தப்படும் என்றும், வாகன சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.