Top News

எமது மனதிலுள்ள குரோதங்களை நீக்குவோமானால் நாடும் முன்னேற வாய்ப்பு உள்ளது






(அஷ்ரப் ஏ சமத்)

முன்னாள் அமைச்சா் இம்தியாஸ் பாக்கீா் மாக்காா் ஒரு ”கீளீன் பொல்டிசியன் ”துாய்மையானதொரு அரசியல் வாதி  . இந்த நாட்டில் உள்ள பௌத்த முஸ்லீம்கள் இன்றும் இம்தியாஸ் மீது பெறும் மதிப்பு வைத்துள்ளாா்கள் .அவா் கடந்த  காலத்தில்  ஒரு முறை கபிணட் அமைச்சராக இருந்துவிட்டு இனி நான் அரசியலில் ஈடுபடுவதில்லை  என்ற அவரது கொள்கையை மாற்றிவிட்டு  மீண்டும் அவர் அரசியலில் குதித்து இந்த நாட்டின் இன ஒற்றுமைக்காகவும் ,முஸ்லீம் சமுகங்களது தலைமைத்துவத்தினை பாரம் எடுக்க  வேண்டும்.  என  முன்னாள் பாராளுமன்ற உறுப்பிணரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமமான எம். எம். சுகையிா் வேண்டு கோள் விடுத்தாா்.

இன்று (22) முன்னாள் அமைச்சா் இம்தியாஸ் பாக்கீா் மாக்காா் மீள்பாா்வை என்ற பத்திரிகையில்  தொடா்ச்சியாக எழுதி வந்த கட்டுறைகளை ” நாடுவது நலம் ”  ஓர் அரசியல்வாதியின் சமுக அனுபவங்கள்  என்ற நுால் வெளியீட்டு வைபவம்  தேசிய நுாலகத்தில்  ஜாமிஆ நளீமியா கலாபீட பணிப்பாளா்  எம்.ஏ.எம். சுக்ரி தலைமையில் நடைபெற்றது. இங்கு  நவமணி ஆசிரியா் என்.எம். அமீன், விடிவெள்ளி  ஆசிரியா்  மொஹமட் பைருஸ்,  ஜனாதிபதி சட்டத்த்ரணி எம். எம். சுகையர், மீள்பாா்வை ஆசிரியா்  பியாஸ் முஹம்மத் ஆகியோறும்  உரையாற்றினாா்கள்.


நுாலின் பிரதிகள்  துருக்கி , பலஸ்தீன் நாடுகளின் துாதுவா் மற்றும்  இந் நுால்  மர்ஹூங்களான ஏ.சி.எஸ்.ஹமீத்,  அஸ்ஸெய்யத் அலவி மௌலானா, ஏ.எச்.எம் அஸ்வா்,  ஷாபி மரிக்காா்,  ஏ.சி.வதுாத்,  ஆகியோறுக்கும்  முன்னாள் அமைச்சர் இம்தியாசினால் சமா்ப்ப்ணம் செய்ய்ப்பட்டது அவா்களது உறவினா்களுக்கும் வழங்கப்பட்டது.


இங்கு உரையாற்றிய அமைச்சா் இம்தியாஸ் -  

இலங்கை பல்லின மக்களை கொண்டதொரு நாடு,  பல சமய பல இன பல மொழிகளை் பேசுவோாின் தாயகமாக  உள்ளது.  நாம்  இம் நாட்டில் வகுப்பு வாதங்களாலே இன்றும்  பின்தங்கி நிற்கின்றோம். எமக்கு பின்னாள் இருந்த நாடுகளான   சீன. சிங்ப்புர், மலேசியா போன்ற நாடுகள்  இன மொழி வகுப்பு வாதாங்களை தள்ளி வைத்து விட்டு நமது நாடு  என சிந்தித்து எல்லோறும் இணைந்து  அவா்களது நாடுகளை இந்த உலகில் சிறந்த நாடுகளாக முன்னேற்றி உள்ளனா். நாமும் இன, துவேச, மத வகுப்பு வாதம் என சிந்திக்காமல்  நமது தலைகளில் உள்ள என்னணங்களில்  குரோதங்களை அகற்றுவோமேயானால் நமது நாடும்  அழகாக முன்னேற வாய்ப்பு உள்ளது.  என இம்தியாஸ் பாக்கீா் மாா்காா் அங்கு உரையாற்றினாா்.
Previous Post Next Post