தொண்டமானின் மகனை, கைது செய்ய உத்தரவு

NEWS


இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் புதல்வாரன ஜீவன் ஆறுமுகனை கைது செய்யுமாறு அட்டன் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையதாக தெரிவித்து மத்திய மாகாண அமைச்சர் எம் ரமேஸ்வரன் உள்ளிட்ட நால்வர் கைது இன்று -11- காலை கைது செய்யப்பட்டனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மஸ்கெலிய சாமிமலை ஓல்ட்டன் பகுதியில் மரண வீடொன்றில் வைத்து இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஆதரவாளர்களுக்கும் தேசிய தொழிலாளர் சங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது திகாம்பரத்தின் ஆதரவாளர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்கான நிலையில், கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்தே மத்திய மாகாண அமைச்சர் ரமேஸ், வெள்ளையன் தினேஷ், பிச்சமுத்து மற்றும் பாஸ்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டனர்.

முன்னிலைப்படுத்திய நாவல்வரையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையின் விடுதலை செய்யுமாறும், மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர், மருதபாண்டி ராமேஸ்வரன் மற்றும் அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வெள்ளையன் தினேஸ் உட்பட நான்கு பேரையும் எதிர்வரும் ஆண்டு ஏப்ரல் மாதம் எட்டாம் திகதி (08.04.2018) மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதோடு,

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபரான ஜீவன் தொண்டமானை கைது செய்து ஹட்டன் நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்துமாறு காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
6/grid1/Political
To Top