Top News

இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார்: லண்டன் மேயர் சாதிக் கான்



லண்டன் மேயர் சாதிக் கான், உயர் மட்ட தூதுக்குழுவினருடன் இந்தியா, பாகிஸ்தானில் 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு வாகா எல்லை வழியே பாகிஸ்தான் சென்றார்.

அங்கு லாகூரில் பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி ஷாபாஸ் ஷெரீப்பை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அப்போது லண்டன் மேயர் சாதிக் கான் பேசுகையில் கூறியதாவது:-

ஒரே நேரத்தில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் செல்ல வேண்டாம் என்று என் நண்பர்களில் சிலர் அறிவுறுத்தினர். ஆனால் முஸ்லிம்கள், இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழ்வதை நான் பார்க்கிறேன். இந்திய, பாகிஸ்தான் மக்களின் உணர்வுகளை காண விரும்புகிறேன். இருதரப்பு மக்களும் ஒருவருக்கொருவர் நல்லெண்ணம் கொண்டிருப்பதை பார்த்து நான் மகிழ்ச்சி அடைந்தேன். 

அரசுகள் இடையே வேண்டுமானால் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மக்களின் சக்தி, அவையும் தங்கள் நிலைப்பாடுகளை மாற்ற வைக்கும். இந்தியா, பாகிஸ்தான் இடையே நல்லிணக்கமான சூழல் உருவாக என்னால் மத்தியஸ்தம் செய்ய முடியும் என அவர் கூறினார். 

Previous Post Next Post