Top News

தெற்காசியாவின் மிகப் பெரிய, சிறுநீரக வைத்தியசாலை பொலன்னறுவையில்





பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்படும் தெற்காசியாவின் மிகப் பெரிய சிறுநீரக மருத்துவமனைக்கான அடிக்கல்லை ஜனாதிபதி மைத்திரிபால சிறினே இன்று -06- காலை நாட்டி வைத்தார்.

சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் இந்த மருத்துமனை நிர்மாணிக்கப்படுகிறது. இதனை நிர்மாணத்துக்கு ஆயிரத்து 200 கோடி ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நவீன ஆய்வுக்கூடம், அதிநவீன தொழிநுட்ப வசதிகளுடன் வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட உள்ளது.

சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை, இரத்த சுத்திகரிப்பு உள்ளிட்ட வைத்திய வசதிகள், ஆய்வு கூட சேவைகள், ஆலோசனை சேவைகள் என்பன இந்த வைத்தியசாலையில் வழங்கப்பட உள்ளன.

வெளி நோயாளர் பிரிவு 200 நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறக் கூடிய வசதிகள், சத்திர சிகிச்சைக் கூடம், தீவிர சிகிச்சை பிரிவு என்பனவும் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட உள்ளன.

இன்று நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் இலங்கைக்கான சீனத் தூதுவர் இய் சியங்லி யாங், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
Previous Post Next Post