ஜெருசலேம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பொதுசபையில் முன்வைக்கப்படும் பிரேணைக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளுக்கு அனைத்து உதவிகளும் ரத்து செய்யப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அண்மையில் அங்கீகரித்தது. இந்தநிலையில் ஜெருசலேம் தொடர்பான அனைத்து தீர்மானங்களையும் ரத்து செய்யும் வகையிலான பிரேரணை ஒன்று ஐக்கிய நாடுகளின் பொதுசபையில் வாக்கெடுப்புக்கு வருகிறது.
இதற்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கும் உதவிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
தங்களிடம் பல பில்லியன் டொலர்களை உதவியாகப் பெற்றுக் கொண்டு தங்களுக்கு எதிராகவே வாக்களிக்கும் நாடுகள் தமக்கு தேவையில்லை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.