Top News

கொடபிடிய தேர்தல் வட்டாரதிற்கு நீதி கிடைக்குமா! முஸ்லிம்களின் விடிவு?


2018ம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அதுரலிய பிரதேச சபையில் வேட்பாளர்கள் 10  தேர்தல் வட்டாரங்கள் ஊடாக போட்டியிடவுள்ளனர். இதில் முஸ்லிம்களை வாக்காளராக கொண்ட ஓர் தொகுதியே கொடபிடிய தேர்தல் வட்டாரம். இவ் வட்டாரம் கொடபிடிய, கனஹலகம, மாரகொட ஆகிய கிராம சேவகப் பிரிவுகளைக் கொண்டதாகும். இத்தொகுதியில் சுமார் 3200 வாக்காளர்கள் உள்ளதுடன் அதில் சுமார் 1100 முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். இங்கு 2:1 என்ற விகிதத்தில் முஸ்லிம் மற்றும் சிங்கள வாக்காளர் உள்ளனர். எனவே புதிய  தேர்தல் சட்டமுறைப்படி இத்தொகுதி ஓர் பல் அங்கத்தவர் தொகுதியாகும்.
புதிய தேர்தல் முறைப்படி ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு பிரதிநிதி தெரிவு செய்யப்படுவார். என்றாலும் குறித்த தொகுதி ஒன்றில் சிங்களம், தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள் சம அளவில் உள்ள போது ஒவ்வொரு இனத்தை பிரதிநிதிப் படுத்தி ஒவ்வொரு பிரதிநிதி தெரிவு செய்ய முடியும்.
இவ்வடிப்டையில் கொடபிடிய தேர்தல் வட்டாரத்தில் சிங்கள மற்றும் முஸ்லிம் இனத்தை பிரதிநிதிப் படுத்தி 2 பிரதிநிதி தெரிவு செய்ய வேண்டும்.  என்றாலும் கொடபிடிய தேர்தல் வட்டாராம் அதுரலிய பிரதேச சபையால் ஓர் தனி அங்கத்தவர் தொகுதியாக பெயரிடப்பட்டுள்ளது. இதனால் கொடபிடிய முஸ்லிம்களை பிரதிநிதிப் படுத்தி ஓர் அங்கத்தவரை அதுரலிய பிரதேச சபைக்கு உள்வாங்க முடியாமல் போகலாம் என முஸ்லிங்கள் அஞ்சுகின்றனர். எனவே இவ்வட்டாரத்தை பல் அங்கத்தவர் வட்டாரமாக மாற்றுமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

Previous Post Next Post