(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கடந்த நோன்புப் பெருநாள் தினத்தன்று ஜூன் 26 ஆம் திகதி வவுனியா சூடுவெந்தபுலவு கிராமத்தில் பெருநாள் திடல் தொழுகையில் ஈடுபட்டிருந் தவர்கள் மீது மேற்கொள்ளப் பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப் பட்டிருந்த வழக்கில் கடந்த 13 ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் மார்க்க வழிபாடுகளுக்கு எவ் விதமான பிரச்சினைகளோ குழப்பங்களோ ஏற்படுத் தக்கூடாது என நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கு உத்தர விட்டதுடன், தாக்கப்பட்டு காயங்களுக்குள்ளா னவருக்கு மருத்துவ செலவுக்காக 50 ஆயிரம் ரூபாய் வழங்கு மாறும் உத்தரவிட்டார்.
பெருநாள் திடல் தொழு கைக்கு அல் அஃலா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம், பொலிஸ் நிலையம், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை என்பனவற் றிடம் அனுமதி பெறப்பட்டி ருந்தமை குறிப்பிடத்தக்கது.
பெருநாள் திடல் தொழுகையின் போது தொழுது கொண்டிருந்தவர்கள் மீது சிலரால் மேற்கொள்ளப் பட்ட தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்ததுடன் மேலும் சிலரும் தாக்கப்பட் டனர். தாக்குதல் நடத்திய தாக 9 பேர் இனங்காணப் பட்டனர்.
பின்பு அவர்கள் நீதி மன்றில் ஆஜர்படுத்தப்பட்டு வைக்கப்பட்டனர். அதனைய டுத்து முறைப்பாட்டுத் தரப் பினரின் மன்னிப்பின் பேரில் 7 நாட்களில் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பிரதிவா திகளின் சட்டத்தரணியால் சமாதானத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும் வாதியின் தரப்பு சமாதானத் துக்கு விருப்பம் தெரிவிக்க வில்லை.
பின்னர் சந்தேக நபர்கள் எச்சரிக்கப்பட்டு மேலதிக விசாரணைக்காகவும் இணக் கத்திற்காகவும் வழக்கு மத்தியஸ்த சபைக்கு அனுப்பப் பட்டு தீர்ப்பு வழங்கும் திகதி 13.12.2017 என குறிப்பிடப் பட்டது.
மத்தியஸ்த சபையில் இருதரப்பினரும் தங்களது பக்க நியாயங்களை முன் வைத்தனர். அதன் பின்பே வவுனியா மேல் நீதிமன்றம் கடந்த 13 ஆம் திகதி மேற்கு றிப்பிட்ட தீர்ப்பினை வழங் கியது.
இந்த வழக்கினை திடல் பெருநாள் தொழுகையை ஏற்பாடு செய்திருந்த கே.எம். ஜவாஹிர் ஜமாலி மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகியவர் ஆகியோர் தாக்கல் செய்திருந்தனர். பிரதிவாதிகளாக 9 பேர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.