மாகாண சபை எல்லை நிர்ணயம் – தேசிய ஷூரா சபை அறிக்கை சமர்ப்பிப்பு

NEWS

மகாண சபைகளுக்கான தேர்தல் தொகுதிகள் எல்லை நிர்ணயம் தொடர்பாக தேசிய ஷூரா சபையும் அதன் அங்கத்துவ அமைப்பான அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனமும் இணைந்து நாடளாவிய ரீதியில் விழிப்பணர்வு மற்றும் ஆய்வுப்பணிகளை மிகவும் குறுகிய கால இடைவெளியில் மேற்கொண்டு வருகின்றது.
இதன் ஒரு அங்கமாக சமூகம் சார் கரிசனைகள், முன்மொழிவுகள் அறிக்கை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள விஷேட குழுவிடம் கடந்த 06/12/2017 அன்று கொழும்பு மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் இடம் பெற்ற அமர்வின் பொழுது தேசிய ஷூரா சபைப் பிரதிநிதிகளால் சமர்ப்பிக்கப்பட்டது.
கடந்த பல வாரங்களாக நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகள் பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் இடம் பெற்ற கலந்துரையாடல்களுக்குப் பின்னரே மேற்படி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல்வேறு மாவட்டங்கள் சார்பாக அறிக்கைகள் அவ்வப்பிரதேச பிரதிநிதிகளால் சமர்ப்பிக்கப்பட்ட அதேவேளை, கொழும்பு மாவட்ட அறிக்கையும் அன்றைய தினம் இடம் பெற்ற சந்திப்பின் பொழுது கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
6/grid1/Political
To Top