ஜப்பானிய போர்க்கப்பல் திருகோணமலையில்

NEWS

ஜப்பானியக் கடற்படையான கடல்சார் தற்காப்புப் படையின், போர்க்கப்பல் ஒன்று திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.
ஜே.எம்.எஸ்.டி.எப் செடோகிரி என்ற ஜப்பானியப் போர்க்கப்பலே இவ்வாறு மூன்று நாட்கள் நல்லிணக்கப் பயணமாக திருகோணமலை துறைமுகத்துக்கு வந்ததுள்ளது.
திருகோணமலை துறைமுகத்தில் ஜப்பானிய போர்க்கப்பலுக்கு, இலங்கை கடற்படையினர் வரவேற்பு அளித்தனர். ஜப்பானிய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட அதிகாரிகளும் கப்பலை வரவேற்க வந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தக் கப்பலில் வந்துள்ள ஜப்பானிய கடற்படையின் 7 ஆவது கப்பல் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கொமாண்டர் தகேஷி ரொனேகாவா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இலங்கை கடற்படையின் கிழக்கு பிராந்தியத் தளபதி உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தினர்.
இந்த ஜப்பானிய போர்க்கப்பல் நாளை திருகோணமலைத் துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
6/grid1/Political
To Top