எமது தரப்பிலிருந்து யாரும் போகலாம், யாரும் வரலாம் எனவும், எமது கட்சியிலிருந்த பொதுச் செயலாளரே கட்சியிலிருந்து என்னிடம் சொல்லாமலேயே சென்றார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
எமது தரப்பிலிருந்து யார் சென்றாலும் பரவாயில்லை. மக்கள் எம்முடன்தான் இருக்கின்றனர் எனவும் மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
ஒவ்வொருவரும் அங்கிருந்து வருகின்றார்கள். இங்கிருந்து வருகின்றார்கள் என கூறுகின்றனர். யார் போகிறார். யார் வருகின்றார் என்பதை வந்த பின்னரும் போன பிறகும் தான் தெரியும். எமது கட்சியின் பொதுச் செயலாளரும் என்னிடம் கூறாமலேயே சென்றார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.