தைக்காநகரில் தேசிய காங்கிரஸ் தோற்றால் உதுமாலெவ்வையின் அரசியல் முடியும்!

NEWS


அட்டாளைச்சேனை பிரதேச சபைத்தேர்தலில் தேசிய காங்கிரஸ் அதிகூடியவாக்குகளை தைக்காநகர் வட்டாரத்தில் பெற்றுக்கொள்ளும் என நப்பாசை கொண்டிருக்கும் உதுமாலெவ்வை என்ட் கம்பனி இம்முறை மண்கவ்வும் என தைக்காநகர் அமைப்பாளர் றமீஸ் குறிப்பிட்டார்,

அண்மையில் சப்றின் மௌவியை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தில் பேசிய அவர்,

தேசிய காங்கிரசுக்கு அதிக வாக்கு எமது வட்டாரத்திலேதான் இருப்பதாக எண்ணியுள்ளனர், இந்த வட்டாரத்தை வெல்வதே அவர்கள் இலக்காக இருக்கிறது, இது தோற்றால் உதுமாலெவ்வை என்ட் கம்பனியின் அரசியல் அஸ்தமனமாகும். இதனை இன்சா அல்லாஹ் செய்து காட்டுவோம் என்றார்.

12 வருட கால மாகாண அமைச்சராக இருந்தவர் முழு அட்டாளைச்சேனையிலும் 2400 வாக்குகளைதான் தன்வசம் எடுத்திருக்கிறார் இதுதான் அவர்களின் அரசியல் பலம், முஸ்லி்ம் காங்கிரசில் இருந்து முகவரி பெற்று தங்களின் சுய நலனுக்காக வெளியேறி இன்று சுகங்கள் அனுபவித்து கொண்டிருக்கும் அரசியல் கொள்ளையர்களின் ஆட்டத்தை நிறைவுக்கு கொண்டுவர தைக்காநகரிலிருந்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம் என்றார்.
6/grid1/Political
To Top