அவுஸ்திரேலியாவில் விமானம் கடத்தல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர், தமது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
கடந்த மே மாதம் 31ம் திகதி மெல்போர்னில் இருந்து கோலாலம்பூர் நோக்கி 337 பயணிகளுடன் பயணித்த விமானம் ஒன்றில் பயணித்த அவர், அதனை தமதுக் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சித்ததாக தெரிவித்து தைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், மெல்போர்ன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது அவர் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
மேலும் அவர் உளநிலை பாதிக்கப்பட்டவர் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.