Top News

சட்டென மாறும் களநிலையும் முஸ்லிம் கட்சிகளும்



சில தொலைக்காட்சி நாடகங்களில் ஒரு சில முக்கிய காட்சிகள் அல்லது இறுதிக் கட்டம் நேயர்களின் எதிர்பார்ப்புக்கு அமைவாக மாற்றியமைக்கப்படுவதுண்டு. ஒரு சில திரைப்படங்களில் கூட ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட முடிவுகளை ரசிகர்கள் ஜீரணிக்காமையால் பின்னர் முடிவுக் காட்சியை மாற்றியமைத்து திருத்தப்பட்ட திரைக்காட்சி வெளியிடப்படுவதை நாமறிவோம்.

அதுபோல மக்களின் விருப்பத்திற்கமைய அரசியல் களத்திலும் அபூர்வமாக சில மாற்றங்கள் நிகழ்த்தப்படுவதுண்டு. வெளித்தோற்றத்தில் இது இக்கதையில் திடீர் திருப்பமாக தெரிந்தாலும் கூட யாரோ வலிந்து காட்சிகளை மாற்றியமைத்திருக்கின்றார்கள் என்பதை உன்னிப்பாக நோக்குவோர் உணர்ந்து கொள்வது அவ்வளவு சிரரமானது அல்ல. 

உள்ராட்சி தேர்தல் களத்தில் சட்டென ஏற்பட்டுள்ள மாற்றமும் இவ்வகையானதாக இருக்குமோ என்றுதான் உள்மனம் சொல்கின்றது.

ஆரம்பத்திலிருந்தே தேர்தல் ஒன்றுக்கு முகம்கொடுப்பதற்கு அச்சங் கொண்டிருந்த அரசாங்கம் ஒரு கட்டத்தில் எல்லா உள்ள10ராட்சி மன்றங்களுக்கும் ஒரேதடவையில் தேர்தலை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுத்தது அல்லது அவ்வாறான ஒரு தோற்றப்பாட்டை வெளிப்படுத்தியது. ஆனால் உள்ளூராட்சி சபைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்யப்பட்டு 203 சபைகளில் தேர்தலை நடாத்துவது சட்ட ரீதியாக சவாலுக்குட்படுத்தப்பட்டமையாலும் மேலும் சுமார் 40 சபைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் அச்சுப் பிழைகள் இருந்தமையாலும் அது சாத்தியப்படவில்லை.

 எனவே எவ்வித சிக்கலும் இல்லாத 93 சபைகளுக்கு தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உத்தேசித்திருந்தார்.
இந்நிலையில் கதை திரைக்கதை வசனம் இயக்கம் தயாரிப்பு என எல்லாவற்றையும் செய்கின்ற ஓரிருவரைப் போலஇ வர்த்தமானிக்கு எதிரான மனு திடுதிடுப்பென வாபஸ் பெறப்பட்டதால் நீதிமன்றம் விதித்திருந்த தடை நீங்கியுள்ளதுடன்இ எல்லா சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடாத்துவதற்கான களச்சூழல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

அதாவது நேயர்களாகிய மக்கள் விரும்பியவாறு மேலும் காலதாமதமின்றி நாடெங்கும் தேர்தல் நடைபெறும் வகையில் இக்கதை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். அதன்படி பெப்ரவரி 10 அல்லது 17ஆம் திகதிகளில் 341 சபைகளுக்கும் வாக்கெடுப்பு இடம்பெறலாம்.

இதேவேளை குறைந்த எண்ணிக்கையிலான சபைகளுக்கே தேர்தல் நடத்தக்கூடிய விதத்தில் புதிய சிக்கல் உருவாகியுள்ளதாக சில ஊர்ஜிதமற்ற தகவல்கள் வெளியாகிய போதும்இ '341 சபைகளுக்கும் தேர்தல் நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை' என்று தேர்தல்கள் பிரதி ஆணையாளர் வீரகேசரிக்கு தெரிவித்தார்.

அரசாங்கத்தின் சூட்சுமம்
நாட்டில் பொதுத் தேர்தல் இடம்பெற்று இரு வருடங்கள் சென்றுவிட்டதாலும் அதற்கிடையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள் சுதந்திரக் கட்சி – ஐ.தே.கட்சி அதிகார மோதல்கள் ஒன்றிணைந்த எதிரணியின் தந்திரோபாயங்கள்இ பிணை முறி விவகாரம் உள்ளிட்ட நிதிக் குற்றச்சாட்டுக்கள் போன்ற காரணங்களாலும் தமது வாக்காளர் ஆதரவுத்தளம் குறித்த அச்சம் இரு பிரதான கட்சிகளுக்கும் ஏற்பட்டிருந்தது.

உண்மையில் அரசாங்கம் மாகாணசபை தேர்தலையும்  அதிகார சபைகளுக்கான தேர்தலையும் நடத்த வேண்டியிருந்தாலும் நிஜத்தில் எந்தவொரு தேர்தலையும் நடத்துவதற்கு நல்லாட்சியாளர்கள் பின்வாங்கினர். முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முனைவது போல தேர்தலை பிற்போடுவதற்காக அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளில் இருந்து அவர்களின் உள்மனஅச்சத்தை உணர்ந்து கொள்ள முடியுமாகவிருந்தது.

முதலில் அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தை கொண்டு வந்து 8 மாகாண சபைகளின் காலத்தை நீடித்து தேர்தலை பிற்போட்டு அந்தத் தேர்தல் நடைபெறும் தினம் வரை அச்சபைகளின் அதிகாரத்தை மறைமுகமாக தமது கரங்களில் வைத்திருக்க அரசாங்கம் முயற்சி செய்தது. 

ஆனால் உயர்நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்தால் அது கைகூடவில்லை. அதன்பிறகு மாகாண சபை தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வந்தது. இதன்படி மாகாணங்களின் தொகுதிகளின் எல்லைகளை மீள் நிர்ணயம் செய்ய வேண்டிய அவசியம் இருந்தமையால் மீள்நிர்ணய நடவடிக்கை என்ற பெயரில் குறைந்தது மூன்று நான்கு மாதங்களுக்கு தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான ஒரு ஆறுதல் அரசாங்கத்திற்கு கிடைத்திருக்கின்றது.

ஆனால் உள்ளூராட்சி சபைகளின்  எல்லைகள் ஏற்கனவே மீள நிர்ணயம் செய்யப்பட்டு விட்டமையாலும் உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல் சட்டத்தில் திருத்தம் நிறைவேற்றப்பட்டு விட்டமையாலும் வேறு எந்தக் காரணத்தைக் கூறியும் தேர்தலை பிற்போட முடியாது என்ற நிலையில்  உள்ளூராட்சி தேர்தலை நடத்த அரசாங்கம் தயாரானது. இதற்கு ஏதுவான வர்த்தமாளி அறிவித்தல்களும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரான பைஸர் முஸ்தபாவினால் பிரசுரிக்கப்பட்டன.

முன்னதாக உள்ளூராட்சி சபைகளின் எல்லை மீள் நிர்ணயக் குழு அறிக்கை சமர்ப்பித்த பிறகு நாட்டில் அப்போதிருந்த 336 உள்ளூராட்சி மன்றங்களின் புதிதாக வரையறுக்கப்பட்ட எல்லைகள்இ அதன் வட்டார எல்லைகள் வரைபடம் என்பவற்றை உள்ளடக்கிய 2006 44ஆம் இலக்க 649 பக்க அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலை இவ்வருடம் பெப்ரவரி 17ஆம் திகதி அமைச்சர் பைஸர் முஸ்தபா வெளியிட்டிருந்தார்.

அதற்குப் பிறகு தேர்தலொன்றை நடாத்துவதற்கு ஏதுவாக நகரபைகள் கட்டளைச் சட்டம் மாநகர சபைகள் கட்டளைச்சட்டம் பிரதேச சபை கட்டளைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் அச்சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களை குறிப்பிட்டு ஒரு வர்த்தமானி அறிவித்தலையும் பிரதேச சபை கட்டளைச்சட்டத்திற்கு அமைவாக புதிய உள்ளுராட்சி சபைகளின் விபரங்கள் மற்றும் திருத்தப்பட்ட கட்டளைகளை உள்ளடக்கிய இன்னுமொரு வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிட்டிருந்தார்.

அத்துடன் தேர்தல் நடத்தப்படாதிருந்த கரைதுறைப்பற்று புதுக்குடியிருப்பு சபைகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான சட்டத்திருத்தமும் மேற்கொள்ளப்பட்டது. எனவே தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கான எல்லா சட்டத் தடைகளும் நீங்கிஇ நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டது. நாடெங்கும் மக்களிடையே தேர்தல் காய்ச்சலும் தொற்றிக் கொண்டது.

மனுக்களும் தடையும்
இந்நிலையில் அமைச்சரினால் பெப்ரவரியில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆறு பிரதேசங்களைச் சேர்ந்த ஆறுபேர் நவம்பர் நடுப்பகுதியில் மனுத்தாக்கல் செய்தனர். இவர்கள் 203 சபைகள் தொடர்பான விடயங்கள் தவறாக உள்ளடக்கப்பட்டிப்பதாக மனுவில் சுட்டிக்காட்டியிருந்தனர். 

இந்த மனுவை கடந்த 22ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம்இ இவ்வர்த்தமானியை நடைமுறைப்படுத்தினால் குறிப்பிட்ட மன்ற எல்லைகளுக்குள் வசிக்கும் மக்களின் வாக்குரிமைக்கு பாதிப்பு ஏற்படும் என்று குறிப்பிட்டு நாளை டிசம்பர் 4ஆம் திகதிவரை இதற்கு இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்தது.

அதேவேளை வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 40 உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான உள்ளடக்கங்களில் அச்சுப்பிழைகள் இருப்பதும் கண்டறியப்பட்டது. எனவேஇ 243 சபைகளுக்கு உடனடியாக தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது அல்லது ஏற்படுத்தப்பட்டது. அதாவதுஇ 203 சபைகளுக்கு தேர்தல் நடத்துவது என்றால் ஒன்றில் மனுக்கள் வாபஸ் பெறப்பட வேண்டும் அல்லது அவற்றுக்கு எதிராக நிதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும். அதேபோன்று சுமார் 40 சபைகள் விடயத்திலுள்ள அச்சுப்பிழைகளை திருத்தி இன்னுமொரு வர்த்தமானியை வெளியிட வேண்டியிருந்தது. 

எனவே எவ்வித பிரச்சினையும் இல்லாத (வன்னி தவிர்ந்த) 21 தேர்தல் மாவட்டங்களைச் சேர்ந்த 93 உள்ள10ராட்சி சபைகளுக்கு மட்டும் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை கடந்த வாரம் தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பித்திருந்தது.

எது எவ்வாறிருப்பினும் உள்ளராட்சி மன்ற தேர்தலை நடாத்துவதில் தடங்கல் ஏற்பட்டமை மக்களின் எதிர்பார்ப்புக்கு முரணாக அமைந்ததுடன் இது அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களுக்கும் வித்திட்டது. அதுமட்டுமன்றிஇ விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரான பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரும் அளவுக்கு நிலைமைகள் சென்றிருந்தன. இந்நிலையில் கடந்த 30ஆம் பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து உரையாற்றிய அமைச்சர் பைஸர் சம்பந்தப்பட்ட ஆறு மனுதாரர்களும் தமது மனுக்களை வாபஸ்பெற இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

அவர் அவ்வாறு குறிப்பிட்டு குறுகிய நேரத்திற்குள் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு முன்னிலையாகிய மேற்குறிப்பிட்ட மனுதாரர்கள் தாம் சமர்ப்பித்த மனுக்களை தாமாகவே மீளப் பெற்றுக்கொள்வதாக தெரிவித்தனர். இதனால் நீதிமன்றம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் மீது விதித்திருந்த இடைக்கால தடையுத்தரவை நீக்கிக் கொண்டுள்ளது. அதாவது ஒருவகையில் பார்த்தால் மனுத்தாக்கல் மற்றும் வாபஸ் விவகாரம் சொல்லி வைத்தாற்போல் நடந்திருக்கின்றது.

கதை – வசனம்
நீதிமன்ற நடவடிக்கைக்கு வெளியில் அதாவது அரசியல் அரங்கில் இந்த மனுக்களுக்குப் பின்னால்  இருந்து யாரோ கதை திரைக்கதை எழுதிக் கொண்டிருப்பதாகவே ஒரு அசரீரி இருந்தது. குறிப்பாக தேர்தலை பிற்போடுவதற்காக அரசாங்கம் நகர்த்துகின்ற காய்கள்தான் இவை என்று சாதாரண மக்களே அங்கலாய்க்குமளவுக்கு நிலைமைகள் இருக்கின்றன. இதேவேளை அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர்இ இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னரே 'யாராவது இதை எதிர்த்து மனுவை போட்டால்தான் தேர்தல் நடத்துவது பிரச்சினையாகும்' என்ற கருத்துப்பட பேசியதாகவும் அரசல்புரசலாக தெரியவருகின்றது.

ஒருவேளை அது உண்மையாக இருக்கும் பட்சத்தில்இ இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போலஇ இந்த சூட்சுமங்கள் எல்லாம் வெளியில் தெரிந்தமையாலும் ரசிகர்களின்(மக்களின்) விருப்பம் வேறு மாதிரி இருந்தமையாலும்இ இக் கதை மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றது என்பதை நம்புவதைத் தவிர வேறு வழியில்லை.

சரி எது எப்படியே இத்தனை பிரளயங்களையும் தாண்டி மனு வாபஸ் பெறப்பட்டதால் திடீர் திருப்பம் ஏற்பட்டதால் இப்போது எல்லா சபைகளுக்கும் தேர்தல் நடாத்தப்படவுள்ளது. ஒரே நாளில் தேர்தல் நடாத்துதல் என்ற கோட்பாட்டின் கீழ் ஏற்கனவே திட்டமிட்டிருந்த 93 உள்ள10ராட்சி சபைகளுக்கும்இ தடையுத்தரவு நீக்கப்பட்ட 203 சபைகளுக்கும் அதேபோன்று எழுத்துப்பிழைகளை திருத்தி 40 சபைகளும் உள்ளடங்கலாக நாட்டில் உள்ள 341 சபைகளுக்கும் ஒரே தடவையில் தேர்தல் நடாத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருக்கின்றது. அநேகமாக பெப்ரவரி 10 அல்லது 17ஆம் திகதியில் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஜனநாயகத்தை விரும்பும் மக்களுக்கு சந்தோசமான செய்தியும் ஆகும்.

முஸ்லிம் கூட்டமைப்பு
நாட்டின் பல பகுதிகளிலும் காலநிலை சட்டென மாறி மழையும் புயலும் அடித்துக் கொண்டிருப்பது போல உள்ளூராட்சி மன்றக்களத்திலும் சட்டென ஏற்பட்டிருக்கின்ற களநிலை மாற்றம் முஸ்லிம் கட்சிகளின் செயற்பாட்டுக் களநிலையையும் வெற்றிக்கான காலநிலையையும் மாற்றிவிட்டிருப்பது மட்டுமன்றி அவர்களது இயங்காற்றலையும் உசுப்புவிட்டிருக்கின்றது.

அரசியலமைப்பு மறுசிரமைப்புக்கான இடைக்கால அறிக்கைஇ கைவிடப்பட்ட 20ஆவது திருத்தம் உள்ள10ராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டம் மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டம்இ புதிய தேர்தல் முறைமை அறிமுகம்இ எல்லை நிர்ணயம்இ உறுப்பினர் ஒதுக்கீடு மற்றும் வழக்கமான இனவாத ஒடுக்குமுறைகள் என கிட்டத்தட்ட எல்லா விடயங்களிலும் முஸ்லிம்கள் அதிருப்தியும் மன விரக்தியும் அடைந்திருக்கின்ற ஒரு காலப்பகுதியில் இந்த தேர்தலை நாம் எதிர்கொள்கின்றோம். எனவே இவற்றுக்கு தீர்வு காணும் ஒரு சந்தர்;ப்பமாக முஸ்லிம் கட்சிகளும் மக்களும் இந்த தேர்தலை பயன்படுத்த வேண்டும்.

பொதுவாக நோக்கினால் இம்முறை உள்ள10ராட்சி சபை தேர்தலில் பிரதானமான சில முஸ்லிம் கட்சிகள் களமிறங்கும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய காங்கிரஸ் முஸ்லிம் கூட்டமைப்பு என்பன அதில் முக்கிய இடம்பிடிக்கும் எனக் கூறமுடியும். முஸ்லிம் கட்சிகள் எல்லா அடிப்படையிலும் ஓரணியாக நிற்க வேண்டிய தேவையும் மக்கள் விருப்பமும் இருக்கின்ற போதிலும் அது சாத்திமற்றதாகவே போய்க் கொண்டிருக்கின்றது.

முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் ஒற்றுமைப்படாதிருப்பது பெருந்தேசிய கட்சிகளுக்கே இலாபமாக அமைகின்றது. ஹக்கீமை காட்டி றிசாட்டையும் றிசாட்டை காட்டி ஹக்கீமையும் இவ்விருவரையும் காட்டி அதாவுல்லாவையும் ஆட்டுவிப்பதற்கு களம் அமைத்துக் கொடுத்ததே இந்த பிரிவினை அரசியல் செயற்பாடு என்பதை யாராவது மறுக்க முடியுமா? இன்று வகுக்கப்படும் கொள்கைளிலும்இ சட்டம் இயற்றலிலும் அரசியலமைப்பிலும் இனவாத ரீதியாகவும் முஸ்லிம்கள் பின்னடைவைச் சந்தித்திருப்பதற்கு காரணம் வெறுமனே 'ஒற்றுமை ஒற்றுமை' என்று சொல்லிக் கொண்டே முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக பிளவுபட்டுச் சென்றதுதான் என்பதை மறந்துவிடக்கூடாது.

ஒரு முஸ்லிம் கூட்டமைப்பு இதற்கு தீர்வாக அமையும் என்பது அரசியல் விற்பன்னர்களின் கருத்தாகும். தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருப்பதால் அவர்கள் சிறுபான்மை இனமாக இருந்து கொண்டே ஒற்றுமை எனும் பலத்தின் மூலம் நிறைய சாதித்துக் கொண்டிருக்கின்றார்கள். பெரும்பான்மை சிங்கள மக்களிடையே இருக்கின்ற இரு பிரதான கட்சிகளும் உண்மையில் ஒரே இலக்கை வேறுவேறு வழிகளில் அடைய முயற்சிக்கும் நிழல் கூட்டுக்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இருப்பது போல முஸ்லிம்களுக்கும் ஒரு கூட்டமைப்பு காலத்தின் தேவைப்பாடாகும். அதனூடாகவே ஊர் ஊராக இருக்கின்ற முஸ்லிம்களின் ஒற்றுமை உணர்வை ஒரு தேசியமாக ஒன்றுதிரட்டி உலகத்தின் முன் நிறுத்த முடியும். அவ்வாறு செய்தாலேயே பெருந்தேசியம் முஸ்லிம்களின் கோரிக்கைகளுக்கும் காதுகொடுக்கும்.

ஒரு கூட்டமைப்பு மூன்று அடிப்படைகளில் உருவாகலாம். முதலாவதுஇ முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் எல்லாவற்றையும் உருவாக்குவதற்கான கூட்டுஇ இரண்டாவதுஇ தேர்தலுக்கான கூட்டு. மூன்றாவதுஇ சில இடங்களில் விட்டுக் கொடுப்பதற்கும் போட்டித்தவிர்ப்பை மேற்கொள்வதற்கும் இணக்கம் காணும் கூட்டு என இது அமையலாம். இதில் முதலாவது வகையான கூட்டு மிக மிக அவசியமாகின்றது.

அந்தவகையில் ஒரு கூட்டமைப்பை உருவாக்குவதற்காக சிலர் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றவர்கள். அதில் சில இணக்கப்பாடுகளும் இணக்கப்பாடின்மைகளும் எட்டப்பட்டுள்ளன. அந்தவகையில் மு.கா.வின் முன்னாள் தவிசாளர் பசீர்சேகுதாவூத் முன்னாள் செயலாளர் எம்.ரி. ஹசன்அலி அணி (ஒரு கட்சியாக) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றை பிரதானமாகக் கொண்ட முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்றை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தில் இருக்கின்றன. இன்னும் சில தினங்களில் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவுப்பு வெளியாகலாம்.

இந்த கூட்டமைப்பில் அரசியல் ரீதியாக இணைந்து ஒப்பந்தம் செய்து பணியாற்றுவதற்கு தேசிய காங்கிரஸ் ஆரம்பத்தில் சற்று விருப்பம் கொண்டிருந்த போதும் அதன்தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா வகுத்த சில வியூகங்களால் முஸ்லிம் கூட்டமைப்பில் நேரடியாக இணைந்து கொள்ளாதிருக்கும் முடிவை அக்கட்சி எடுத்திருக்கின்றது. ஆனபோதும் இனப் பிரச்சினைக்கான தீர்வு போன்ற மக்களுக்கு அவசியமான பொது விடயங்களில் இணைந்து பணியாற்றவும் சில விடயங்களில் முஸ்லிம் கூட்டமைப்புடன் நல்லெண்ண அடிப்படையில் செயலாற்றவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகின்றது.

இதேவேளை முஸ்லிம் கட்சிகளின் ஒன்றிணைவு பற்றி ஆரம்பத்திலிருந்தே சிந்தித்திருக்க வேண்டிய முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் றவூப் ஹக்கீமும் இந்த நிமிடம் வரை அதற்காக முன்னிற்கவும் இல்லைஇ கூட்டமைப்பில் இணைந்து கொள்ளும் பச்சை சமிக்கையை காட்டவும் இல்லை. இதை முஸ்லிம்மக்கள் நன்கு குறிப்பெடுத்து வைத்திருக்கின்றார்கள். எனவே முஸ்லிம் கூட்டமைப்பு உருவாகுமானால் முஸ்லிம் கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரஸிற்கும் தேசிய காங்கிரஸிற்கும் இடையில் ஒரு முக்கோண போட்டி நிலவ வாய்ப்பிருக்கின்றது.

அப்படிப் பார்த்தால் ஒரு கூட்டமைப்பு உருவான பிறகு கூட முஸ்லிம்களின் வாக்குகள் சிதறி விடக் கூடாது என்ற கவலை இப்போது முஸ்லிம் சமூக செயற்பாட்டாளர்களிடையே ஏற்பட்டிருக்கின்றது.

அந்தவகையில் உள்ளூராட்சி தேர்தல் சண்டைக் களமாக பார்க்கப்படும் உள்ளூராட்சி சபை தேர்தலில் புதிய கலப்பு தேர்தல் முறைமையின் கீழ் வாக்கெடுப்பு இடம்பெறுகின்ற ஒரு  சூழ்நிலையில் தத்தமது கட்சிகளுக்கு வாக்குச் சேகரிக்கின்ற முயற்சியில் குட்டையைக் குழப்பி எந்தக் கட்சியைச் சேர்ந்த முஸ்லிமும் தெரிவாகாத நிலையை உருவாக்கி விடக் கூடாது. மாறாகஇ இந்த சமூகம் பற்றி சிந்திக்கின்றஇ கொடுத்த வாக்கை காப்பாற்றுகின்ற குறிப்பாக வடக்குஇ கிழக்கு மக்களின் அபிலாஷைகளுக்கு முன்னுரிமை அளிக்கின்ற கட்சித் தலைவரைக் கொண்ட கட்சிக்கும் வேட்பாளருக்கும் வாக்களிக்க வேண்டும்.

இந்தக் கதை எப்படியிருந்தாலும் அதன் முடிவு முஸ்லிம்களுக்கு 'சுபமாக' இருக்க வேண்டும்.

ஏ.எல்.நிப்றாஸ் 
Previous Post Next Post