Top News

ஊடகங்களுக்கு எதிரான குற்றங்கள் ஜனநாயகத்திற்கு எதிரானவை – பிரதமர்


ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றச்செயல்கள், ஜனநாயகத்திற்கு எதிரானவையாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இன்று ஆரம்பமான ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் வன்முறைகளுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அரசாங்கம் இலங்கையில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்த பிரதமர் கடந்த 2005, 2015 காலப்பகுதியில் இலங்கையில் 9 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் லசந்த விக்ரமதுங்க இதில் ஒருவர் என்பதுடன் மேலும் பல ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், கடத்தல் சம்பவங்களும் கடந்த காலப்பகுதியில் இடம்பெற்றதுடன், கடந்த கால ஆட்சியின்போது, ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதற்கும், மௌனிக்கச் செய்வதற்கும், குரூரமான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும், சில ஊடகங்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கின என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்றிட்டங்கள் குறித்து இலங்கையின் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post