Top News

அச்சமடைந்த ஷிரந்தி ராஜபக்ச மைத்திரிக்கு தகவல்???



ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இதனால் பதற்றமடைந்த முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச சமாதானத்திற்காக தகவல் ஒன்றை ஜனாதிபதி தரப்பினருக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மஹிந்த ஆட்சியின் போது ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் தலைவராக ஷிரந்தி ராஜபக்சவின் சகோதரரான நிஷாந்த விக்ரமசிங்க என்பவரே செயற்பட்டார்.

அவர் தலைவராக செயற்பட்ட காலப்பகுதியில் ஸ்ரீலங்கன் நிறுவனத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடி மற்றும் முறைக்கேடுகள் தொடர்பில் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தன.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டால், அனைத்து தகவல்களும் வெளியே வந்துவிடும் என ஷிரந்தி ராஜபக்ச அச்சமடைந்துள்ளார்.

இதனால் எந்தவொரு ஒப்பந்தத்தின் அடிப்படையிலாவது ராஜபக்ச தரப்பினரை ஜனாதிபதி தரப்பினருடன் சமாதானமாக்குவதற்கு தான் தலையிடுவதாக ஷிரந்தி தகவல் அனுப்பியுள்ளார்.

நிஷாந்த விக்ரமசிங்க ஸ்ரீலங்கன் தலைவராக செய்றபட்ட காலக்கட்டத்தில் உத்தியோகபூர்வமற்ற தலைவியாக ஷிரந்தி ராஜபக்ச செயற்பட்டார். ஷிரந்தியின் அவசியத்திற்கமைய அங்கு பல மில்லியன் ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post