மரண வீட்டில் தாக்குதல்; மாகாண அமைச்சர் கைது

NEWS



மரணவீட்டில் தாக்குதல் மேற்கொண்ட  சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில்  மத்தியமாகாண விவசாய அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்தியமாகாண விவசாய அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன், முன்னாள் அம்பகமுவ பிரதேசசபையின் தலைவர் வெள்ளையன் திணேஸ் மற்றும் தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் இருவர்  உட்பட நால்வரை  இன்று -11- மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மஸ்கெலியா  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை ஓல்டன் தோட்டத்தில் மரண வீடொன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் காயமுற்ற ஹட்டன் பிரதேசத்தை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையொருவர்  காயமுற்ற நிலையில் டிக்கோய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலையிக்கு மாற்றப்பட்டுள்ளார் 

தாக்குதல் சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாட்டிற்கமைய மேற்படி நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்
6/grid1/Political
To Top