முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அவர்கள் குமாரியுடன் பிழையாக நடந்தார் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக தான் அழிவு சத்தியன் கூற தயார் என்றும், அது உண்மை இல்லை என்றால் ரவுப் ஹகீம் சத்தியத்துக்கு தயாரா என்றும் பாலமுனையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் அன்சில் அவர்களால் சவால் விடுக்கப்பட்டது.
ரவுப் ஹகீம் – குமாரி என்ற குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதுதான் இவரது நோக்கமாகும். இந்த குமாரி விவகாரம் 2004 ஆம் ஆண்டு சக்தி, சிரச உட்பட அனைத்து தொலைக்காட்சிகளிலும் மற்றும் அனைத்து அச்சு ஊடகங்களிலும் விவாதிக்கப்பட்ட விவகாரமாகும்.
குமாரியை ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கொண்டுபோய் வைத்தது தொடக்கம் அவளை உபசரித்தது வரைக்கும் இன்றைய ஊழலுக்கு பெயர்போன அமைச்சர் ஒருவர் கமராவில் பதியப்பட்ட காட்சி அன்று மிகவும் தெளிவாக காண்பிக்கப்பட்டது.
அந்தவகையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹகீம் செய்தது பிழை என்று வைத்துக்கொள்வோம். இது நடைபெற்றது 2004 ஆம் ஆண்டு. அன்சில் முஸ்லிம் காங்கிரசை விட்டு விலகியது 2௦17 ஆண் ஆண்டு. இதற்கு இடைப்பட்ட காலம் 13 வருடங்கள்.
குற்றம் செய்த பிழையான ஒரு தலைவரை இந்த பதின்மூன்று வருடங்களும் நல்லவர் என்றும், வல்லவர் என்றும் மேடை மேடையாக பிரச்சாரம் செய்தது ஏன்?
இந்த தலைவர் பிழையாக தலைமை தாங்கிய கட்சிக்கு 13 வருடங்களும் மக்கள் மத்தியில் வாக்களிக்க சொன்னது ஏன் ?
இந்த பிழையான தலைவர் தலைமை தாங்கிய கட்சியில் அன்சில் கடந்த பல முறை தேர்தல் கேட்டது ஏன் ? அந்த கட்சி ஊடாக தவிசாளரானது ஏன் ?
கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழு செயலாளராக பணியாற்றியது ஏன்?
கட்சியில் அதியுயர்பீட உறுப்பினராக இருந்தும், இன்று மக்கள் மத்தியில் பகிரங்கமாக கூறுகின்ற குற்றச்சாட்டுக்களை அதியுயர் பீடத்தில் கூறாதது ஏன்?
இதுவரை பிழையான தலைமைத்துவத்தின் கீழ் இருந்தது சரியாக தெரிந்த அன்சிலுக்கு, இப்பொழுது பிழையாக தெரிந்தது ஏன் ?
இப்பொழுது மட்டும் பிழையாக காண்பிக்கின்ற காரணிகள் எது ? அதனை அன்சில் வெளிப்படுத்துவாரா ?
அந்த காரனிகள் இன்று அம்பாறை மாவட்டம் எல்லாம் கரைபுறண்டு ஓடுகின்ற ஊழல் பணமா ?
அல்லது அன்சில் கட்சியைவிட்டு வெளியேறிய பின்பு அதாவது 13 வருடங்களுக்கு முன்பு இறந்துபோன குமாரியின் ஆவியுடன் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு இன்று ஏற்பட்ட உறவு என்று கூறி, அதனை உறுதிப்படுத்த அன்சில் அழிவு சத்தியம் செய்வேன் என்று கூறுகின்றாரா ?
மேலும், இந்தியாவிடம் இருபது கோடி வாங்கியதுக்கு அழிவு சத்தியம் செய்ய தயாரா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். தேர்தல் நடைபெற்றது 2௦15 ஆண்டு. அப்படியென்றால் இந்த பணத்தினை 2௦15 ஆண்டுதான் பெற்றிருக்க வேண்டும்
.
அன்சில் எப்பொழுது முஸ்லிம் காங்கிரசிலிருந்து வெளியேறினார் ? 2௦17 ஆண்டு. இதற்கு இடைப்பட்ட காலத்தில் இருபது கோடி வாங்கிய ஹக்கீம் அன்சிலுக்கு வல்லவராக தெரிந்தது ஏன் ? அவரது பதில் என்ன ?
இந்தியா ஹக்கீமுக்கு மட்டும் பணம் கொடுத்ததா ? அல்லது ஊழல் பெருச்சாளிகளுக்கும் பணம் கொடுத்ததா ? அல்லது மகிந்தவுக்கு எதிராக செயல்பட்ட அனைத்து சக்திகளுக்கும் பணம் கொடுக்கப்பட்டதா ?
இன்று அன்சில் இணைந்திருக்கின்ற, முழு நாட்டுக்குமே வெட்ட வெளிச்சமான ஊழல் பெருச்சாளிகளின் ஊழல்கள் தொடர்பாகவும், அழிவு சத்தியம் செய்வாரா ? அல்லது நாளை ஒருநாள் ஊழல் பெருச்சாளிகளிடமிருந்து வெளியேறும்போது இந்த அழிவு சத்திய பல்லவி பாடப்படுமா ?
அன்சில் உண்மை பேசுபவராக இருந்தால் அவரிடம் நேர்மை இருந்தால் இந்த கேள்விகளுக்கு அவரால் பதில் தர முடியுமா ? அவ்வாறு முடியாவிட்டால் அது ஏன் என்று கூறுவாரா ?
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது