மைத்திரியை நோக்கி வரும் கூட்டு எதிர்க்கட்சியின் எம்.பிக்கள்

NEWS


கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்துக்கொள்ள உள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் முன்னர் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உள்வாங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில், கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகித்த மக்கள் ஐக்கிய முன்னணியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி விஜேவிக்ரம நேற்று ஜனாதிபதியை சந்தித்து அவருக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.
6/grid1/Political
To Top