இலங்கையுடனான வெளிநாட்டு கொள்கையில் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்திய கங்கிரஸ் கட்சி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இலங்கையில், சீனாவின் ஆதிக்கம் இந்தியாவை பொறுத்தவரை கவலைக்குரிய விடயம் என அந்த கட்சியின் பேச்சாளர் மனிஸ் திவாரி (Manish Tewari) குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நேபாளத்தின் புதிய அரசாங்கம், இந்தியாவின் கொள்கைகளுக்கு சாராது தனித்தியங்குகிறது. மாலைத்தீவு, சீனாவுடன் திறந்த பொருளாதார உடன்படிக்கையில் இந்தியாவிற்கு அறிவிக்காமலேயே கைச்சாத்திட்டுள்ளது.
இவை அனைத்தும் நிகழ்ந்தது, இந்தியாவின் தவறான வெளிநாட்டு கொள்கையின் காரணமாகவே என கங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் குறிப்பிட்டார்.