நாளை நள்ளிரவுடன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் நடாத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சாதாரண தரப் பரீட்சை பூர்த்தியாகும் வரையில் வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித கொழும்பு நாளிதழ் ஒன்றுக்கு இது பற்றி தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இந்தத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி மாதிரி வினாத்தாள் அச்சிடுதல், வினாக்கள் குறித்து கலந்துரையாடல், கருத்தரங்குகள் நடாத்துதல், வகுப்புக்களை நடாத்தல் உள்ளிட்டனவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 12ம் திகதி கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.