கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அக்கரைப்பற்று மக்கள் மகிந்த ராஜ பக்சவை எதிர்த்து நின்ற போது நான் மகிந்த ராஜபக்சவோடுதான் நிற்பேன் என்று சொல்லிக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் இப்போது வந்து இரண்டு மகன்மாரையும் தேர்தலில் நிறுத்திவிட்டு அக்கரைப்பற்று மக்கள் எனக்கு வாக்களிக்கவேண்டும் என்று சொல்லுவது அவரின் அரசியல் இயலாமையைக்காட்டுவதாக கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேலைவாய்ப்புச் செயளாளருமான ஏ.எல்.தவம் அவர்கள் எதிர்வரும் அக்கரைப்பற்று மாநசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில், நான் தவிசாளராக இருந்த போது அக்கரைப்பற்று பஸ்தரிப்பு நிலையத்தை எனது உயிரைப்பணயம் வைத்து மீட்டெடுத்தேன் அதேபோல் தின்மக்கழிவகற்றும் செயற்திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக அகில இலங்கை ரீதியில் தவிசாளராக இருந்த நான் தங்கப்பதக்கமும் பெற்றுவிட்டுத்தான் வந்தேன் என்னை வெளியேற்றிய பின் இவரின் மகனை மேயராக்கி என்ன சாதித்தார் ஒன்றைக்கூற முடியுமா?
நான் மாகாணசபையில் இருந்து கோடிக்கணக்காண நிதியின் முலம் வீதிகளைப் போடுவதற்கு நிதிகளைக்கொண்டு வந்த போது வாப்பாவும் மகனும் சேர்ந்து அனுமதிவழங்காமல் தடுத்தார்கள் காரணம் இவர்களைத் தவிர இந்த ஊரில் வேறு யாரும் அபிவிருத்தி செய்யவும் கூடாது ஆளவும் கூடாது.
நீங்கள் வாக்களித்து அனுப்பியதற்க்கு அக்கரைப்பற்றுக்கு இவர்கள் செய்யும் சேவை இதுதான் இவர்கள் இந்த ஊரை குடும்பச் சொத்தாக ஆளுவதனை அக்கரைப்பற்று மக்கள் சற்று சிந்தியுங்கள் ஏன் அக்கரைப்பற்றை ஆளுவதற்கு சாதாரண ஒரு விவசாயியின் மகன், அல்லது ஒரு ஆசிரியர், ஒரு வைத்தியர் அல்லது ஒரு தொழிலதிபர் ஆளுவதற்குத் தகுதி இல்லையா? முன்னாள் அமைச்சரின் மகன்மார்தான் ஆள வேண்டுமா? எனவேதான் அக்கரைப்பற்று மக்கள் சிந்திக்கும் காலம் வந்துவிட்டது எனவே எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் யானைச்சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரிப்பதன் முலம் நீங்கள் சந்திக்கு சந்தி நின்று நியாயமான அரசியலைப் பேசமுடியும் இப்போது இது நடந்து கொண்டிருக்கின்றது இதை 2015க்கு முன் கதைத்தால் என்ன நடந்திருக்கும் என்தனை சற்று சிந்தித்துப்பாருங்கள் எனவே அந்தக் கலாச்சாரம் இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இல்லை எனவே அக்கரைப்பற்று மக்கள் இத்தேர்தலில் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர நீங்கள் யானைச்சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனத்தெரிவித்தார். இக்கூட்டதத்தில் ஐக்கியதேசியக்கட்சியின் அமைப்பாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.