நாட்டின் தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.குருணாகல், பொல்பித்திகம பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
அரசாங்கத்திற்குள் ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட நபர்கள் உள்ளூராட்சி சபைகளில் ஊழல், மோசடிகளில் ஈடுபட மாட்டர்கள் என்பதற்கான உறுதிமொழியை வழங்க முடியாது.
கடந்த அரசாங்கத்தில் நடந்த ஊழல் மோசடிகள் தொடர்பான சாட்சியங்களை திரட்டி பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றிடம் வழங்கிய போதிலும் இதுவரை குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.
இப்படியான சூழலில் புதிய அரசாங்கம் பதவிக்கு 50 நாட்களுக்குள் இலங்கை மத்தி வங்கியில் மிகப் பெரிய கொள்ளையடிப்பு நடந்ததாகவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.