வடகொரியாவுக்கு ஐக்கிய நாடுகள் விதித்த தடையையும் பொருட்படுத்தாது சீனா எரிபொருள் விநியோகித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
வடகொரியாவின் ஏவுகணைப் பரிசோதனை நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவர எடுக்கும் முயற்சிகள் சீனாவின் நடவடிக்கையினால் பயனற்றுப் போவதாகவும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
சீனா இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. ஐ.நா. வின் தடையை மீறியதாக எந்தவொன்றையும் தாம் செய்யவில்லையெனவும் சீனா மறுத்துள்ளது.
வடகொரியாவின் ஏவுகணைப் பரிசோதனையை முறியடிப்பதற்கு அந்நாட்டுக்கு விநியோகித்து வரும் எரிபொருளை 90 வீதத்தினால் நிறுத்தி விடுமாறு தெரிவித்து ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபை கடந்த வாரம் கட்டளையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.