நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பலர் தேர்தல் களத்தில் குதிக்கின்றனர்.
இதற்கமைய கொள்ளை, போதை விற்பனை போன்ற குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கேகாலை- கலிகமுவ, பிந்தெனிய பிரதேசத்தின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் போட்டியாளராக களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் கடந்த 2000 ஆம் ஆண்டு போகல பத்தலே பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவம் தொடர்பில் கேகாலை நீதிமன்றில் குற்றவாளியாக இனங்காணப்பட்டவர்.
மேலும், இவர் நாரங்கொட- மெடிலந்த பிரதேசத்தில் விபசார விடுதி ஒன்றை நடத்தி சம்பவத்துடனும் தொடர்புடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கொழும்பு-ஹல்பிட்ட தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர் ஒருவர் சட்டவிரோத மதுபான விற்பனையுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேப்போல், ஜக்கிய தேசிய கட்சி சார்பில் தங்காலை பிரதேசசபைக்கு போட்டியிடவுள்ள வேட்பாளர் ஒருவர் இதற்கு முன்னர் இலஞ்சம் பெற்ற சம்பவத்தால் கைதுசெய்யப்பட்டவராவார்.
இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணி சார்பில் எஹலியகொட பிரதேசசபைக்கு போட்டியடவுள்ள வேட்பாளர் ஒருவர் தங்க நகைகள் திருட்டு சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளன.