“தேர்தல் சட்டங்களை மீறாது தேர்தல் பணிகளை முன்னெடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க” ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கட்சியின் அனைத்துத் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுக்கு, இவ்வாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தொடர்பாடல் பிரிவு, இளைஞர் மற்றும் மகளிர் சங்கங்கள், லக்வனிதா அமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான தொழிற்சங்கங்கள் உள்ளிட்டனவற்றுக்கு தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் பணிகளை சட்ட மீறல்கள் இன்றி முன்னெடுக்க அறிவுறுத்தல் விடுக்குமாறு கட்சியின் தலைவர் ரணில் கோரியுள்ளார்.
ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களுடன் முரண்பாடு ஏற்படும் வகையில் செயற்படக் கூடாது எனவும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
எவரேனும் தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும், இதற்கு கட்சியின் சட்டத்தரணிகளின் உதவிகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.