அக்கரைப்பற்று பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்து கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றதோடு ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேருக்கு மோதிக்கொண்டதனால் குறித்த விபத்து நேர்ந்துள்ளது. கல்முனையில் இருந்து வந்துகொண்டிருந்த பல்சர் ரக மோட்டார் சைக்கிளும், சாய்ந்தமருது பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளும் மோதுண்டதில் பல்சர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவருக்கு தலையின் பின்புறம் அடிபட்டு அந்த இடத்திலேயே இரத்தம் சீரிட்டு பாய்ந்துள்ளது.
அடுத்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவருக்கும் பயணித்த பெண்ணுக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அதிக வேகத்தின் காரணமாக குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
காயமடைந்த அனைவரும் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.