உலக வங்கியின் நிதியுதவியின் இரண்டாம் நிலை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் சிறு கைத்தொழில் உபகரணங்கள்

NEWS


ஏறாவூர் ஏ.ஜீ.முஹம்மட் இர்பான் 

உலக வங்கியின் நிதியுதவியின் இரண்டாம் நிலை சுகாதார உதவி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் ஏறாவூர் நகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் வாழ்கின்ற மிக வறிய குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு முதற்கட்டமாக வாழ்வாதார உபகரணங்கள் நகர சபையின் செயாளரும், விஸேட ஆணையாருமாகிய பிர்னாஸ் இஸ்மாயில் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

'சுத்தமான கை கழுவுதல்' எனும் தொனிப் பொருளின் கீழ் இன்று (22) இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு நிருவாக உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.ஹூசைன், சனசமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.சி.எம்.நிபாத் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு வாழ்வாதார உபகரணங்களை வழங்கி வைத்தனர். 

இந்த வேலைத்திட்டம் கடந்த 4 ஆண்டு காலமாக நடைமுறைப்படுத்தி வருவதாகவும் இதன் மூலம் தங்களின் வாழ்தார செயற்பாடுகளில் மிக அதிகமாக அக்கரை செலுத்தி நாளாந்த வருமானங்களை ஈட்டிக்கொள்ளவேண்டும் என்று நகர சபையின் செயாளரும், விஸேட ஆணையாருமாகிய பிர்னாஸ் இஸ்மாயில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த வேலைத்திட்டத்துக்கு உலக வங்கி பாரிய நிதியுதவிகளை வழங்கி வருவதாகவும், இரண்டாம் நிலை சுகாதார உதவி அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் ஏறாவூர் நகர சபைக்குட்பட்ட வறிய குடும்பங்கள் பல உள்வாங்கப்பட்டுள்ளதாகவும், இந்த உதவிகள் தொடர்ந்தும் கிடைக்கவுள்ளதாகவும், அதற்கான இரண்டாம் கட்ட நடவடிக்கையில் இன்னும் சில கும்பங்கள் உள்வாங்கப்பட்டு அவர்களுக்கான வாழ்வாதார உபகரணங்கள் மிக விரைவில் வழங்கி வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
6/grid1/Political
To Top