முஹம்மட் நியாஸ்
அட்டாளைச்சேனை 15-16ம் குறிச்சிகளை உள்ளடக்கிய தைக்காநகர் வட்டாரம் இம்மு அரசியல் கட்சிகளுக்கு ஓர் பாடமாக அமையும் என தேசப்பற்றுள்ள முஸ்லிம் தேசியவாதிகள் இயக்கத்தின் தலைமை செயற்பாட்டளரும், பிரபல ஊடகவியலாளருமான பஹத் ஏ.மஜீத் குறிப்பிட்டுள்ளார்,
இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த பஹத் ஏ.மஜீத் மேலும் தெரிவிக்கையில்,
எமது வட்டாரம் கல்வியிலும், அபிவிருத்தியிலும், தொழில்வாய்ப்பிலும் பெரிதும் பின்தங்கியுள்ளது, இதனை கடந்தகால அரசியல்வாதிகள் வேண்டுமென்று புறக்கணித்தனர், தற்கால அரசியல்வாதிகளும் புறக்கணித்தனர். எமது இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பில்லை பல குடும்பங்கள் இன்னும் பின்தங்கிய சூழ்நிலையில் உள்ளது. வீதிகள் பல கேட்பாரற்று கிடக்கிறது. மாணவர்களுடைய கல்வித்தரம் பின்தங்கியுள்ளது.
ஊருக்குப்பின்னால் உள்ள கோச்சுப்பொட்டியின் உள்ளக அபிவிருத்தி மற்றும் மனிதவள அபிவிருத்தி பாரிய பின்னடைவில் இருக்கிறது, சரியான ஒருமைதானம் இல்லை, பாடசாலையில் கல்விவளக்குறை என ஆயிரம் குறைகளை மாத்திரம் வைத்துள்ள எமது மக்களுக்கு அரசியல் வாதிகள் பாரிய துரோகம் செய்துள்ளனர் அதனை இன்றுள்ள இளைஞர்கள் உணர்ந்துள்ளனர். எதிர்வரும் தேர்தலில் அவர்களுக்கு சரியான ஒரு பாடம் கற்பிக்கப்படும்.
இயக்கம் சார்பில் சுயேச்சையாக கேட்பது தொடர்பில் முடிவுகள் எட்டப்படவில்லை, கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகிறது. எமக்கான சரியான தீர்வினை பெற்றுத்தரும் கட்சிக்கு ஆதரவாக செயற்படுவது முடிவுகள் எட்டப்படாவிட்டால் சுயேச்சையாக அதியுச்ச அரசியல் பிரச்சாரம் இந்த வட்டாரத்தில் பிரயோகப்படுத்தப்படும் என குறிப்பிட்டார்.