முஸ்லிம்களின் புனிதத் தளம் மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்திருக்கும் பூர்வீக பூமியான ஜெரூஸலத்தை இஸ்ரேலின் தலை நகரமாக அறிவிப்பு செய்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராகவும், அமெரிக்காவின் ஏகாதிபத்தியம் மற்றும் பலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் அடக்குமுறைகளை கண்டித்தும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் எதிர்வரும் செவ்வாய் கிழமை (12.12.2017) கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவராலயம் முற்றுகையிடும் போராட்டம் நடைபெறவுள்ளது.
சரியாக பகல் ஒரு மணிக்கு காலி முகத்திடல் (Galle Face) சுற்று வட்டத்தில் வைத்து ஆர்பாட்டம் ஆரம்பமாகவுள்ளது.
முஸ்லிம்களுக்கு சொந்தமான பலஸ்தீன பூமியை ஆக்கிரமித்து தற்போது மஸ்ஜிதுல் அக்ஸாவையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் காரியத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்க-இஸ்ரேல் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் நமது உறவுகளான பலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுக்க குடும்பத்துடன் பங்கெடுப்போம் வாருங்கள்!