Top News

ஓட்டமாவடி முதலாம் வட்டாரத்தை UNP யின் கோட்டையாக மாற்றுவேன்.



ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்


இன்று 29.12.2017 இஸா தொழுகையின் பின் இடம் பெற்ற ஓட்டமாவடி முதலாம் வட்டார அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முக்கியமான ஒன்று கூடலின் பொழுது ஐக்கிய தேசிய தேசிய கட்சியின் கல்குடா தொகுதி இளைஞர் அமைப்பாளரும், உள்ளூரட்சி தேர்தலின் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய விகிதாசார தேர்தல் பிரிவின் வேட்பாளருமான சமீர் மெளலவி ஓட்டமாவடி முதலாம் வாடாரத்தினை ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய கோட்டையாக மாற்றி தருவேன் என கல்குடாவின் அரசியல் தலைமையும் பிரதி அமைச்ச்ருமான அமீர் அலியிடம் ஓட்டு மொத்த ஓட்டமாவடி முதலாம் வாட்டார அகில இலங்கை மக்கள் கங்கிரசின் ஆதரவாளர்கள் முன்னிலையில் அமீர் அலியிடம் சத்திய வாக்கு கொடுத்தமை ஓட்டமாவடி அரசியலில் ஒரு திருப்பு முனையக மாறிய விடயமாக பார்க்கப்படுகின்றது..

இது ஓட்டமாவடி பிரதேச சபையினை பிரதி அமைச்சர் அமீர் அலியின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி எதுவித போட்டிகளும் அற்ற நிலையில் கைப்பற்றுவதற்கு மேலும் உரம் இடும் ஒரு வேலை திட்டமாகவே பார்க்கபப்டுவதற்கு அப்பால் முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விடயமாக பார்க்கப்படுகின்றது. ஓட்டமாவடி முதலாம் வட்டாரத்தின் தீர்மானிக்கப்பட்ட வெற்றியாக சபீர் மெளலவி வலம் வருவது ஓட்டமாவடிக்கு மட்டுமல்லாமல் முழு கல்குடாவிற்கும் கிடைத்துள்ள வரப்பிரசாரகம் என்றே அரசியல் விமர்சகர்கர்கள் தமது கருத்தினை குறித்த பிரதேசத்தில் தெரிவித்து வருகின்றனர்.

எது எதுவாக இருந்தாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அப்துர் ரவூப் கிபத்துல் ஹக்கீமிற்கு மிகவும் இக்கட்டான அரசியல் சூழ் நிலைகளில் கை கொடுத்தவரும், கடந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்லாது தேசியத்திலேயே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏறாவூர் அலிஷாஹிர் மெளலானா மூலம் மரச்சின்னத்தில் போட்டியிட்டு பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தினை பெற்றுக்கொள்வதற்கு முக்கிய காரண கர்த்தாவான இருந்த ஓட்டமாவடி சபீர் மெளலவி என்பது தேசியம் அறிந்த விடமாகும்.

அது மட்டுமல்லாமல் சபீர் மெளலவியானவர்.. ஓட்டமாவடி பிரதேசத்தில் முக்கிய அரசியல் காய் நகர்த்தல்களை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மேற்கொண்டு வந்தவர் என்ற வகையில், கடந்த காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் முக்கிய பிரச்சனையாக காணப்பட்ட கல்முனை மேயர் பிரச்சனையினை தீர்த்து வைப்பதற்காக மேயர் சிராஸ் மீராஷாஹிப்பினை இராஜினாமா செய்வைத்து நிசாம் காரியப்பருக்கு அப்பதவியினை கையளிக்க வைத்து கட்சியின் தலைமைக்கும் பாரிய பங்காற்றிய சபீர் மெளலவி கடந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அலி சாஹிர் மெளலானா முஸ்லிம் காங்கிரசில் வெற்றியடைவதற்கு மிக முக்கிய பங்காற்றியவர் என்பது முஸ்லிம் காங்கிரசின் அதி உயர் பீடம் மட்டுமல்லாது அடிமட்ட போரளிகள் கூட அறிந்த விடயமாகும்.

மேலும் அன்மையில் ஐக்கிய தேசிய கட்சியின் கல்குடா தொகுதி இளைஞர் அமைப்பாளாராக நியமிக்க பட்ட சபீர் மெளலவி ஓட்டமவடி பிரதேசத்தில் தேசிய அரசியல்வாதிகளுக்கு நிகராக அதிகமான வேலை வாய்ப்புக்களை படித்த இளைஞர்களுக்கு வழங்கியுள்ளமை கல்குடா பிரதேசத்தில் பலராலும் பரவலாக பேசப்படும் விடயமாகவும் மாறியுள்ள அதே நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே தனது அரசியல் தலைவன் என அன்மைக்காலமாக சபீர் மெள்லவி கூறி வருது கல்குடாவில் மீண்டும் இரண்டு தசாப்தங்களுக்கு மேலான இடைவெளிக்கு பின்னர் ஐக்கிய தேசிய கட்சி தனது இஸ்தீரத்தினை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு முக்கிய ஆணி வேராக அமையும் என்பதில் மாற்று கருத்திருக்க இடமில்லை.

எது எவையாக இருந்தாலும் ஓட்டமவடி பிரதேச சபையில் சபீர் மெளலவி ஐக்கிய தேசிய கட்சியில்துணிவுடன் களமிரங்கி இருக்கின்றமையானது நிச்சயமாக ஓட்டமாவடி பிரதேச சபையினை ஐக்கிய தேசிய கட்சி 1994ம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் கைப்பற்ற கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதும் மறுபக்கத்திலே இருக்கின்ற உண்மையாகும். அத்தோடு சபீர் மெளலவியின் குறித்த துணிகராமான முடிவானது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு கல்குடா பிரதேசத்தில் மட்டுமல்லாமல் தேசியத்திலேயே பாரிய பின்னடைவினை ஏற்படுத்துவதோடு, அதன் தலைமையான அப்துர் ரவூப் கிபத்துல் ஹக்கிமிற்கும் பாரிய நெருக்கடியினை கொடுக்கும் என்பதில் மாற்று மருத்திருக்க இடமில்லை என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாகவும் இருக்கின்றது.

Previous Post Next Post