Top News

100 ரூபா இலஞ்சம் பெற்ற கல்முனை வீதிப் போக்குவரத்து அதிகாரசபையின் பஸ் ​நேரப் பதிவாளர் கைது



100 ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கல்முனை வீதிப் போக்குவரத்து அதிகாரசபையின் பஸ் ​நேரப் பதிவாளர், கல்முனை பஸ் நிலையத்திற்கு முன்னால் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

முன்னால் வருகின்ற பஸ்களால் இடையூறு இன்றி தமது பஸ்களை செலுத்துவதற்கு தேவையான வசதியை செய்து தருவதற்காக அவர் இவ்வாறு இலஞ்சம் பெற்றுள்ளார். 

இவர் பல காலமாக தனியார் பஸ்களிடமிருந்து இவ்வாறு இலஞ்சம் பெற்று வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 

சந்தேகநபரை அம்பாறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சபையின்
Previous Post Next Post