Top News

மஹிந்தவின் ஆட்சிக்கால நிதி மோசடி குறித்த 1200 பக்க அறிக்கை இன்று வெளியீடு


மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் 17 பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இன்று (02) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் நீண்ட விசாரணைகளின் பின்னர் தயார்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் இவறிக்கை 1200 பக்கங்களைக் கொண்டதாக காணப்படுகின்றது.
இவ்வறிக்கையில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற லஞ்ச, ஊழல் முறைப்பாடுகள் குறித்து விசாரணை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இது போன்ற ஊழல் மோசடிகள் இதன்பிறகு இடம்பெறாதிருக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இவ்வறிக்கையில் முன்மொழிவுகள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஏற்கனவே, மத்திய வங்கி நிதி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  
Previous Post Next Post