மேற்படி கருத்தரங்கானது க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் பரீட்சை எழுதிய மாணவர்களுக்காக அடுத்து என்ன? (what is next ?) என்பதுதொடரபில் விளக்கமளிப்பதனூடாக தமிழ் மொழி மூல மாணவ சமுதாயத்தில் ஒரு கல்விப் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. இக் கருத்தரங்கானது 2018 ஜனவரி மாதம் 08 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 1.00 மணி வரைஅவிசாவளை - சீதாவக்கபுர நகர சபை மண்டபத்தில் நடை பெறவுள்ளது.
தலைநகரின் பிரபல உளவள ஆலோசகரும், அமேசன் கல்லூரியின் பணிப்பாளருமான திரு. இல்ஹாம் மரிக்கார் மற்றும் பல்லாயிரக்கணக்கானமாணவர்களுக்கு கல்வி, தொழில்சார் வழிகாட்டல்களை வழங்கிய உளவள ஆலோசகரும், பயிற்றுவிப்பாளருமான திரு. எம். ஜே.எம். சனீர்ஆகியோர் இக்கருத்தரங்கில் பிரதான வளவாளர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.
இக்கருத்தரங்கில் 2020 ஆம் ஆண்டின் முதல் தர துறைகள் எவை ? எந்த துறையினைத் தெரிவு செய்வது ? எவ்வாறு வெற்றி அடைவது ? போன்றபல முக்கிய விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்படவுள்ளன. பிரதேச வரலாற்றில் தமிழ் மொழியில் முதல் முறையாக நடைபெறும்இந்நிகழ்வில் மாணவர்களாகிய நீங்கள் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுவதோடு, உங்கள் நண்பரகளுக்கும் இந்நிகழ்வு பற்றி அறியத்தந்துஅவர்களையும் அழைத்து வர முயற்சி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இக்கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை தல்துவை - ரோயல் அகாடெமி கல்வி நிலையம் மேற்கொண்டுள்ளது.