(எம்.எம்.மின்ஹாஜ்)
ஜனவரி 8 போராட்டத்தை நாம் தொடர்ந்து கொண்டு செல்வோம். ஜனாதிபதியின் பேச்சை கணக்கெடுக்க வேண்டாம். இது தேர்தல் காலமாகும். எதிர்வரும் 10 ஆ திகதிக்கு பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தை இதனை விட பலமாக 2025 ஆம் ஆண்டு வரை கொண்டு செல்வோம். மக்கள் வழங்கிய
ஆணையை மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு காட்டிக்கொடுக்க மாட்டோம் என சுகாதார, சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன
தெரிவித்தார்.
இது மொட்டு சின்னத்திற்கு மீண்டும் ஆட்சியை வழங்குவதா அல்லது முன்னெடுத்து செல்வதா என்பதனை தீர்மானிக்கும் தேர்தலாகும். 2018 ராஜபக்ஷ குடும்பத்தை வெலிகடை சிறையில் அடைக்கும் வருடமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். கேகாலையில் நேற்று நடைப்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
ஜனவரி 8 ஆம் திகதி செய்த அர்ப்பணிப்பு அனைவருக்கும் தெரியும். இந்த போராட்டம் சாதாரணமல்ல. தோற்றால் நிலத்திற்கு கீழ் சென்றிருப்போம். எனினும் உறுதியான தீர்மானத்தை எடுத்தோம். அரசியலில் இருந்து விலக வேண்டும் அல்லது ராஜபக்ஷவிடம் இருந்து விலக வேண்டும் என்ற நோக்கத்துடனே இருந்தோம். இரகசிய பேச்சுவார்த்தையின் மூலமே போராட்டங்களை முன்னெடுத்தோம். மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க முடியாது என்று பலரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. பிரதமருடன் இணைந்து இந்த அரசாங்கத்தை அமைப்பதற்கான போராட்டத்தை முன்னெடுத்தோம்.
துதூவர்களும் மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க முடியாது என்றே கூறினர். இந்த ஆட்சியை முன்கொண்டு செல்வதே எமது இந்த தேர்தலில் உள்ள போராட்டமாகும். மொட்டு சின்னத்திற்கு மீண்டும் ஆட்சியை வழங்குவதா அல்லது முன்னெடுத்து செல்வதா என்பதனை தீர்மானிக்கும் தேர்தலாகும்.
வடக்கு பெற்றோர்கள் சுதந்திரமாக போராடுகின்றனர். இதனை பார்க்க போது
சந்தோஷமாக உள்ளது. ஹராம் ஹலால் தொடர்பாக முஸ்லிம்கள் கடந்த காலத்தில் அச்சம் கொண்டனர். எனினும் தற்போது நாம் சுதந்திரத்தை தந்துள்ளோம். இது போதாதா?. நீதிமன்றத்தையும் சுயாதீனமாக்கியுள்ளோம். தொலைபேசி அச்சுறுத்தல் காலம் நிறைவு பெற்றுள்ளது.
தற்போது தேர்தலில் வன்முறைகள் கிடையாது. ஒற்றுமையாக தேர்தலில் போட்டியிடுகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளோம். மஹிந்த ராஜபக்ஷ தேங்காய் சம்பல் தொடர்பாக பேசுகின்றார். நான் அவருக்கு தேங்காய் சம்பல் பற்றி தெளிவாக கூறுவேன்.வரட்சி காரணமாகவே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேங்காய் சாப்பிட முடியாவிடின் டின் மீன் சாப்பிடுங்கள். நாம் விலைகளை குறைத்துள்ளோம். மஹிந்த ராஜபக்ஷவிற்கு தேங்காய் சம்பல் இல்லாவிட்டால் வயிற்றுகுள் சோறு இறங்காதா?.
சுகாதார நிவாரணங்களை மைத்திரி - ரணில் கூட்டணியே வழங்கியது. எனினும் முன்னைய ஆட்சியின் போது இவ்வாறு சுகாதார சேவையை தரமாக்க நிதி செலவிடவில்லை. மஹிந்த ராஜபக்ஷவை இல்லாமல் செய்து மைத்திரிபால சிறிசேனவை கொண்டு வர போராடவில்லை. நாட்டின் நிலைமையை மாற்றவே ராஜபக்ஷவை தோற்கடித்தோம். பொது மக்களின் துயரங்களை நாம் அறிவோம். மக்களின் வழங்கிய மக்கள் ஆணையை மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு காட்டிக்கொடுக்க மாட்டோம்.
எனவே கிராமத்தை எமக்கு வழங்குங்கள். இது ராஜபக்ஷ குடும்பத்தை வெலிகடை சிறையில் அடைக்கும் வருடமாகும். கோத்தாபய தற்போது தப்பியோடி விட்டார். பிரஜாவுரிமை இல்லாமல் ஆக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பாரிய மோசடிகளை செய்துள்ளனர். ராஜபக்ஷ வீரர்களை நாம் நீதிமன்றத்திற்கு விரைவில் கொண்டு வருவோம்.
இது வசிம் தாஜூதீன் வழக்கு விசாரைணக்கு வழக்கு தாக்கல் செய்யும் வருடமாகும். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை அமைக்க உதவுங்கள். இரகசிய கருத்து கணிப்பில் கேகாலையை ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிக்கொள்ளும் என தெரியவந்துள்ளது. ஜனவரி போராட்டத்தை நாம் தொடர்ந்து கொண்டு செல்வோம். ஜனாதிபதியின் பேச்சை கணக்கெடுக்க வேண்டாம். இது தேர்தல் காலமாகும். 10 திகதிக்கு பின்னர் இதனை விட பலமாக கொண்டு செல்வோம். 2020 இலும் இதே அரசாங்கத்தை கொண்டு செல்வோம். 2025 பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் தீர்மானம் எடுப்போம் என்றார்.