2011ஆம் ஆண்டு மு.காங்கிரசின் ஊடாக அரசியலுக்குள் நுழைந்து, அதே ஆண்டில் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளரான ஏ.எல்.எம். நசீர்; 2012ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிட்டு, அதிலும் வெற்றி பெற்றிருந்தார்.அலுவலக செய்தியாளர் சுஹைல் அஹமட்
இவரின் அரசியல் பிரவேசம் என்பது குதிரைவலு வேகம் கொண்டது காரணம் பல முக்கியஸ்தர்கள் கட்சிக்குள் இருந்தபோதிலும் நசீரை கட்சி தலைமை இவரை நம்பியமைக்கான காரணங்கள் பலவிருக்கிறது, கள அரசியல் என்பது அரசியல்வாதிக்கு இருக்க வேண்டிய முக்கிய திறமை அது இவருக்கு நிறையவே உள்ளது, களத்தில் நின்று கட்சிக்காக பாடுபடுவது, மக்களுடன் வைத்திருக்கும் தொடர்பு, மக்களின் அதிக விருப்பம், மக்களுக்கான சேவை, மக்களின் நம்பிக்கைக்குரிய மனிதர் என பல புறத்தில் இவரிடம் திறமைகள் உள்ளது. இதனாலேயே இவர் அதீத விருப்பத்திற்கு உள்ளானார். கட்சித் தலைமை இவரை நிறையவே நம்பியுள்ளது. பலமுறை கட்சித் தலைமைக்கு களத்தில் சிக்கல்கள் இட்பெற்ற போது தனியாக களத்தில் முன்முனைந்து பிரச்சினைகளை தீர்த்தவர் எனபது குறிப்பிடத்தக்கது,
தேசியப்படடியலுக்கான அனைத்து அலுவலக வேலைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் 23ம் திகதி அல்லது அதற்கு பிந்திய சில தினங்களில் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார், பின்னர் அட்டாளைச்சேனையில் பாரிய ஊர்வலம் ஏற்பாடாகியுள்ளது, இதில் தலைவர் மக்கள் மத்தியில் தான் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிய அதே சந்தோசத்துடன் மக்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.