Top News

சிரியா கார் வெடிகுண்டு தாக்குதல் : பலி எண்ணிக்கை 23- ஆக உயர்வு



சிரியாவின் வடமேற்கு திசையில் அமைந்துள்ள கட்லிப் நகரில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 23- ஆக உயிரிழந்துள்ளது.

சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதிபர் பஷார்-அல்-அசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாத குழுக்கள் போரிட்டு வருகின்றன. இதனால் அங்கு தினமும் வன்முறை சம்பவங்களும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இந்த நிலையில் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள கட்லிப் நகரில் நேற்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனால் அங்கிருந்த கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின. ரோட்டில் நிறுத்தியிருந்த கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமாயின.

இக்குண்டு வெடிப்பில் 23 பேர் பலியாகினர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று குண்டுவெடிப்பில் பலியானோர் மற்றும் காயம் அடைந்தவர்களை கட்டிட இடிபாடுகள் மற்றும் இடிந்த வீடுகளில் இருந்து மீட்டனர்.

இத்தாக்குதலுக்கு காரணம் தெரியவில்லை. மேலும் இதற்கு எந்த வித தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆளில்லா விமானம் மூலம் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. 

Previous Post Next Post