Top News

மயிலிட்டி காசநோய் மருத்துவமனை 28 வருடங்களின் பின் விடுவிப்பு


பாறுக் ஷிஹான்

மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை 28 ஆண்டுகளுக்கு பின்னர் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை மற்றும் அதனுடன் இணைந்த 3 ஏக்கர் நிலப்பரப்பு  திங்கட்கிழமை (29.01.2018) மாவட்ட செயலகத்திடம் படைத்தரப்பினரால் கையளிக்கப்பட்டது.

1990 ஆம் ஆண்டிலிருந்து வலிகாமம் இடப்பெயர்வுடன் மயிலிட்டி பிரதேசம் முழுமையாக பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர் மயிலிட்டி பிரதேசம் விடுவிக்கப்படாது என இராணுவத்தரப்பினரால் கூறப்பட்டது. 

எனினும் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் வலி.வடக்கு காணிகள் பகுதி பகுதியாக விடுவிக்கப்பட்டு வந்த நிலையில் மயிலிட்டி துறைமுகம் கடந்த ஆண்டு யூலை மாதம் மக்களிடம் கையளிக்கப்பட்டது எனினும் அங்கிருந்த காசநோய் வைத்தியசாலை விடுவிக்கப்படவில்லை அதனை . இராணுவத்தினர் விடுதியாக மாற்றி 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் திகதி தொடக்கம் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் யாழ்..மாவட்ட கட்டளை தளபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது இந்த வைத்தியசாலை காணியும் விடுவிக்கப்படும் என தெரிவித்திருந்தார். இவ்வாறான நிலையில் நேற்றைய தினம் பாதுகாப்புத் தரப்பினரால் இவ் வைத்தியசாலை விடுவிக்கப்பட்டது இதற்கான உத்தியோகபூர்வ கடிதம் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் க.முரளிதரனிடம் படைத்தரப்பினரால் நேற்றுக் கையளிக்கப்பட்டுள்ளது. இது உடனடியாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையிடம் அது ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விடுவிக்கப்பட்ட வைத்தியசாலைக் காணியை சுற்றி இராணுவத்தினர் தென்னங்கன்றுகள் பூ மரங்கள் என நாட்டி அழகாக இக் காணியை வைத்துள்ளார்கள்.

இதேவேளை சுதந்தர தினம் அன்று(04) ஆம் திகதி பருத்தித்துறை- பொன்னாலைவீதியும் இராணுவத்தினரால் முழுமையா விடுவிக்கப்பட்டவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post