Top News

2 கோடி ரூபா முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களும் பெற்றார்களா?



பாறுக் ஷிஹான்

அரசிடம் இருந்து இரண்டு கோடி ரூபாக்களை முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெற்றிருந்தால் அதற்கான காரணத்தை  மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என யாழ் முஸ்லீம் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த வரும் நிறைவேற்றப்பட்ட பட்செட் தொடர்பிலான  விடயங்களுக்கும் வடகிழக்கை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ரூபா 2 கோடி நன்கொடையாக அரசினால்   வழங்கப்பட்டுள்ளது என ஊடகங்கள் பல தற்போது செய்திகள் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் தாம்  குறித்த அந்நிதியை பெற்றதாகவும் அது இலஞ்சமாக ஏனைய எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிப்பது போன்று அல்லாமல் தமது பிரதேச அபிவிருத்தி அந்நிதியை பெற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

இது தவிர குறித்த நிதி மூலம் தாம் அபிவிருத்திக்கு ஒதுக்கிய விடயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தியும் உள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறு முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களுக்கும் ரூபா 2 கோடி நிதயை பெற்றுள்ளனர் என்ற குற்றச்சாட்டு ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது இவ்விடயம் தொடர்பாக முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தரப்பினர் இவ்விடயம் குறித்து தெளிவு படுத்துமாறு மக்கள் கேட்டுள்ளனர்.
Previous Post Next Post