Top News

பாலஸ்தீனத்து ரூ.420 கோடி நிதி உதவி நிறுத்தம்: அமெரிக்கா நடவடிக்கை



ஜெருசலேம் விவகாரத்தால் பாலஸ்தீனத்துக்கு ஆண்டுதோறும் வழங்கி வந்த ரூ.825 கோடி நிதியுதவியில் தற்போது பாதி மட்டுமே வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

ஜெருசலேமை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். அதற்கு பாலஸ்தீனம் உள்ளிட்ட உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அமெரிக்காவின் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது.

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இது கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து கடந்த 2-ந்தேதி டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டார். அதில், ‘‘பாலஸ்தீனத்து அமெரிக்கா பல நூறுகோடி ரூபாய் நிதிஉதவி வழங்குகிறது. ஆனால் பாராட்டோ அல்லது மரியாதையோ இல்லை.

ஜெருசலேம் பிரச்சினையில் இஸ்ரேலுடன் நீண்ட காலமாக நடைபெறும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படவில்லை. எனவே பாலஸ்தீனத்து அளித்துவரும் நிதி உதவியை ஏன் நிறுத்தக் கூடாது’’ என தெரிவித்து இருந்தார்.

பாலஸ்தீனத்து ஆண்டுதோறும் அமெரிக்கா ரூ.825 கோடி அளவில் நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு பாதி அளவு தொகை நிதி உதவி மட்டுமே வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

ஐ.நா.வின் நிவாரணம் மற்றும் பணிகள் முகவாண்மையிடம் பாலஸ்தீனத்து ரூ.405 கோடி மட்டுமே வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் 420 கோடியை வழங்காமல் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. இந்த தகவலை அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

Previous Post Next Post