மியான்மர் நாட்டில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டது.
மியான்மர் நாட்டில் இன்று அதிகாலை ரங்கூனில் இருந்து சுமார் 186 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 அலகுகளாக பதிவானது என அமெரிக்க வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. சில கட்டிடங்களில் லேசான விரிசல் ஏற்பட்டது. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.