மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸ் நாட்டின் கடற்கரை பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 7.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் மையமானது நடுக்கடலில் 10 கி.மீட்டர் ஆழத்தில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் எதுவும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தை தொடர்ந்து பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம், கரீபியன் கடலில் ( ஜமைக்கா, மெக்சிகோ,ஹோன்டுராஸ், கியூபா நாடுகளுக்கு) சுனாமி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகின் அதிக நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில் ஒன்றாக ஹோண்டுராஸ் கடற்கரை பகுதியும் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.