ஸாஹிராவின் 79ஆவது பழைய மாணவர் சங்கத்தின் ஒன்றுகூடல்

NEWS


மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் 79ஆவது பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் பொதுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை இரவு ஸாஹிராக் கல்லூரி ஆரம்பப் பிரிவு கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் 2009 க.பொ.த. சாதாரண தர பரீட்சை மற்றும் 2012 க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களின் ஒன்றியமான 79ஆவது பழைய மாணவர் சங்கம், பாடசாலை மட்டத்திலும், சமூக மட்டத்திலும் பல்வேறு திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது. 

நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற மூன்றாவது பொதுக் கூட்டத்தில் அடுத்த இரண்டு வருடத்திற்குமான 11 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழு தெரிவு செய்யப்பட்டதுடன், இவ்வருடத்திற்கான டி-சேர்ட் அறிமுகம் செய்ந்தும் வைக்கப்பட்டது. 



6/grid1/Political
To Top