காலி லபுதுவ உயர் தொழில்நுட்பக் கல்லூரி (ATI) மாணவர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து மாபெரும் ஆர்பாட்ட பேரணி ஒன்றை நேற்று (23. 01.2018) ஏற்பாடு செய்தனர்.
மகபொல புலமைப் பரிசில் உதவித் தொகையை 5000 ஆக உயர்த்துதல், மாணவர்களுக்கான விடுதி வசதியை பெறுதல். விரிவுரையாளர் (Lecture) பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இவ்வார்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
11 கற்கை நெறிகளை கொண்ட இக் கல்லூரியின் பிரதான நான்கு பீடங்களான முகாமைத்துவ பீடம், இன்ஜினியர் பீடம். தகவல் தொழில்நுட்ப பீடம், விவசாய பீடம் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இவ் ஆர்பாட்ட பேரணி லபுதுவ கல்லூரி வளாகத்தில் நண்பகல் 12:30கு ஆரம்பாகி மாணவப் பேரணி கராபிட்டிய வீதியூடாக சுமார் 8km நடை பவணியாக சென்று காலி மாநகரை பிற்பகல் 2:30கு அடைந்தது. இதனால் கராபிட்டிய, காலி மாநகரில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.
இவ் ஆர்பாட்டத்தை ஏற்பாடு செய்த மாணவ அமைப்புகள் (HNDA, HNDM, HNDBA, HNDTHM, HNDENGLISH, HNDE(civil, electrical, mechanical, QS), HNDIT, HNDT (AGRI)) தமது கருத்துக்களை பின்வருமாறு தெரிவித்தனர்.
உயர் கல்வி அமைச்சின் கீழ் இயங்குகின்ற (SLIATE) உயர் தொழிநுட்ப கல்லூரிகளுள் பாரியதும், அதிக மாணவர்கள் கற்கின்ற கல்லூரியே லடுதுவ உயர் தொழில்நுட்ப கல்லூரியாகும். இங்கு சுமார் 2 ௦௦௦ மாணவர்கள் 11 பாடநெறிகள் ஊடாக தமது கற்கை நெறிகளை தொடர்கின்றனர்.
18 வருட வரலாற்றை உடைய இக்கல்லூரிக்கு நாட்டின் நாலாபுறமிருந்தும் மாணவர்கள் கற்க வருகின்றனர். என்றாலும் தூர பிரதேச ஆண்களுக்கும், பெண்களுக்கும் இங்கு தங்கி கற்பதற்கு விடுதி வசதி கிடையாது. இப் பிரச்சினையும் இன்று நேற்று உருவாகியது அல்ல. இப் பிரச்சினையும் 18 ஆண்டுகள் பழமையானதாகும். இப் பிரச்சினை பற்றி கடந்த ஆண்டு லபுதுவையில் ஏற்பாடு செய்திருந்த ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்களுக்கு அறிக்கை ஒன்று முன்வைத்தோம். என்றாலும் இதுவரை பதில் கிடைக்கவில்லை.
மகபொல புலமைப்பரிசில் உதவித்தொகை பல்கலைக்கழக மாணவர்களுக்கு 5 000 ரூபா வழங்கப்படுகின்றது. என்றாலும் எமக்கு வெறும் 1 500 ரூபாவே கிடைக்கின்றது. அதுவும் வழங்குகின்ற விகிதாசாரத்தையும் குறைத்துள்ளனர். ஏன் இந்த பாகுபாட்டை அரசு நம்மீது காட்டுகின்றனர். பல்கலைக்கழக மாணவர்களுக்கு போன்றே தம்முடைய உதவித்தொகையை 5 000 ஆக உயத்துமாறு கோருகின்றோம்.
இங்கு சுமார் 2000 மாணவர்கள் கற்கின்றனர். என்றாலும் இங்கு அணைத்து பீடங்களிலும் விரிவுரையாளர் பற்றாக்குறை காணப்படுகின்றது. இப்பற்றாக்குறைகளை நீக்கி தமக்கு சுதந்திரமாக கற்க ஏற்பாடு செய்யவும்.
நாம் நமது பிரச்சினைகளை ஜனாதிபதி, பிரதமர், உயர்கல்வி அமைச்சர், கல்லூரி பணிப்பாளர் ஆகியோருக்கு பலமுறை கடிதம் மூலக அறிவித்தோம். என்றாலும் குறித்த அதிகாரிகள் தமது பிரச்சினையை தீர்க்க முன்வரவில்லை. எனவே முதற்கட்டமாக நாம் நமது ஆர்பாட்டத்தை கடந்த ஆண்டு கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்தோம் அதுவும் தீர்வு கிடைக்கவில்லை. இரண்டாம் கட்டமாக இன்று எமது ஆர்பாட்டத்தை காலி மாநகரில் செய்கின்றோம். இன்றும் தீர்வு கிடைக்காவிடின் நமது ஆர்பாட்டத்தை அடுத்த கட்டமாக SLIATE தலைமை காரியாலய முன் செய்வோம்.
இவ்வாறு தமது கோரிக்கைகளை முன்வைத்தனர். இவர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.