Top News

முஸ்லிம்கள் என்றாலே கசக்கும் ஜனாதிபதிக்கு, அவர்களின் உதவிகள் மட்டும் இனிக்கிறது !!



இலங்கை நாட்டின் அவசர தேவைகளுக்கு முஸ்லிம் நாடுகளே உதவி செய்கின்றபோதும்இலங்கை ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன இலங்கை முஸ்லிம்களைபுறக்கணித்து செயற்படுவதிலிருந்துஅவர் முஸ்லிம்களை கறிவேப்பிலையாகபயன்படுத்த முயற்சிப்பதாகவே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

இலங்கை நாட்டின் வளர்ச்சியில் முஸ்லிம் நாடுகளின் உதவிகளை யாராலும்மறுத்திட முடியாதுஇலங்கையில் புரையோடிப்போயிருந்த யுத்தத்தைஒழிப்பதற்குஆயுத ரீதியான உதவி வழங்கியதில் பாக்கிஸ்தான் நாட்டின்பங்களிப்பு இன்றும் நினைவு கூறப்படுகிறது.அது போன்று இன்றும் பல அவசரசந்தர்ப்பங்களின் போது முஸ்லிம் நாடுகளே உதவி செய்வதை நாம் கண்ணூடாகஅவதானிக்க முடிகிறது.

அண்மையில் இலங்கை நாடானது எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் உரவிநியோகத்தில் பாரிய சவாலை எதிர்நோக்கியதுபெற்றோல் தட்டுப்பாட்டால்நாடே சில நாட்கள் ஸ்தம்பிதமுற்றதுஎமது அருகாமையில் உள்ள இந்தியநாடானதுஇதனை சாதகமாய் பயன்படுத்தி தரமற்ற எரிபொருளை விற்பனைசெய்ய முயற்சித்ததுஇதன் போதுஇலங்கை நாட்டுக்கு துபாய் அரசே அவாசரமாகஎரிபொருளை அனுப்பி உதவி செய்தது

தற்போது நாட்டில் உரப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுஇந்த உரப் பற்றாக்குறையைநிவர்த்தி செய்யக் கூடபாக்கிஸ்தான் நாடே உதவி செய்கிறதுஅதுவும் ஒருதொலைபேசி அழைப்பினூடான கோரிக்கைக்குஆபத்தில் உதவுபவனேஉண்மையான நண்பன் என்பார்கள்இலங்கைக்கு மிகவும் இக்கட்டானசந்தர்ப்பங்களின் போதுமுஸ்லிம் நாடுகள் உதவி செய்கின்ற போதும்இலங்கைமுஸ்லிம்களை இலங்கை ஜனாதிபதி சற்றேனும் கவனத்தில் கொள்வதாகஇல்லை.

கிந்தோட்டை சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி இன்னும் வாய்திறக்கவில்லை.முஸ்லிம் முக்கியஸ்தர்கள் பலரும் அழைத்தும்தேசிய மீலாத்விழாவில் ஜனாதிபதி கலந்துகொள்ளவில்லை.இப்படி ஜனாதிபதி முஸ்லிம்களைபுறக்கணிப்பதற்கு பல ஆதாரங்களை காட்டலாம்.முஸ்லிம் நாடுகளின் உதவிமட்டும் தேவைமுஸ்லிம்கள் தேவையில்லை என்ற ஜனாதிபதியின்நிலைப்பாட்டைஅவர் மாற்றிக்கொள்ள வேண்டும்இத்தனைக்கும் மேலாக,இவ்வாட்சி அமைத்தலில் முஸ்லிம்களின் அபரிதமான பங்களிப்பு உள்ளமை,இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

 அஹமட்
ஊடக செயலாளர்,
முஸ்லிம் முற்போக்கு முன்னனி .
Previous Post Next Post